கருணாவும் நானும் வெளியேறியதே புலிகள் பலவீனமடையக் காரணம் -கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலவீனமடைந்து அரச படைகளால் தோற்கடிக்கப்பட்டமைக்கு அந்த அமைப்பிலிருந்து தாங்கள் வெளியேறியதே பிரதான காரணம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். தாம் மற்றும் கருணாஅம்மான் போன்ற முக்கிய போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியமை விடுதலைப் புலிகள் இயக்கத்தை நேரடியாகவே பலவீனப்படுத்தியது எனவும் அவர் குறிப்பிட்டார் கொழும்பு வந்திருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் இன்றைய வீரகேசரி வார வெளியீட்டுக்களித்த பேட்டியிலேயே இதனைத் தெரிவித்தார்.
யுத்தநிறுத்த காலத்தில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்தைகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் கலந்து கொண்டிருந்தாலும் தமிழீழ கோரிக்கையை அவர்கள் கைவிடவில்லை இதன் காரணமாக அந்த அமைப்பின் போக்கில் அதிருப்தியுற்ற நாம் வெளியேறினோம் இதனை ஓரு பிளவு என்றே கூறலாம் இதன் பிளவானது புலிகள் அமைப்பில் ஆட்கள் சேர்வதனை அல்லது சேர்க்கப்படுவதனை வெகுவாகப் பாதித்தது நாம் இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்னர் கிழக்கு மாகாணத்திலிருந்து எவரும் புலிகள் அமைப்பில் சேரவில்லை இது புலிகள் அமைப்பை ஆட்பலரீதியாக கடுமையாகப் பாதித்தது. சமாதான ஒப்பந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் கூட மக்களை கவலை கொள்ளச் செய்வதுடன் அவர்கள் மீது வெறுப்பினை ஏற்படுத்தியது இவ்வாறான காரணங்களால் புலிகள் அமைப்பு பலவீனமடைந்திருந்தது இதனை நன்கறிந்து கொண்ட அரசாங்கம் சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்தி புலிகளை அழித்து இலகுவாக வெற்றி கொண்டது என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment