கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ் கலாசார அடையாளங்களை அரசாங்கம் அழிக்கிறது : சுரேஷ் பிரேமசந்திரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ் கலாசார அடையாளங்களை சீரழிக்க மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முயற்சித்து வருவதாக யாழ்ப்பாண மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நிலக்கண்ணி வெடி அபாயங்களை காரணம் காட்டி, மகிந்த அராசாங்கம் பொது மக்கள் இன்னும் குடியமர்த்தாது இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கிளிநொச்சி மாவட்டதில், சிங்கள மக்களை குடியமர்த்தும் பொருட்டு, பௌத்த விகாரைகள, புத்த சிலைகள் மற்றும் இறந்த இராணுவ வீரர்களுக்கான கல்லறைகளை அமைத்துவருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஓமந்தைக்கும் பலாலிக்கும் இடையிலான பாரிய பிரதேசத்தில் இருந்து அனைத்து கட்டிடங்களையும் அழித்து, அங்கு பௌத்த கட்டிடங்களை அரசாங்கம் நிர்மானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சிய மாவட்டத்தின் கலாசார மண்டபம், ஹிந்து மன்ற கட்டிடம், மற்றும் பல்வேறு ஹிந்து மற்றும் தமிழ் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த கட்டங்களை அரசாஙகம் தரைமட்டமாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மாவட்டங்களின் தமிழ் கலாசாரம் முழுமையாக சீரழித்து முடியும் வரையில், அராசாங்கம் பொது மக்களை மீள குடியமர்த்தாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பொன்னம்பலம் வைத்தியசாலை, கந்தசாமி கோவில் உள்ள கரடிபொட்டு பிரதேசத்தை, இராணுவ நிலையம் ஒன்று அமைக்க அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிலக்கண்ணி வெடிகள் இங்கு உண்மை பிரச்சினை இல்லை என தெரிவித்த அவர், அரசாங்கம் மீள குடியேற்றத்தை தாமதப்படுத்தும் பொருட்டு சர்வதேசத்திடம் முன்வைக்கும் போலி நியாயம் இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment