பிரபாகரனுக்கு சிகிச்சை வழங்கிய தாதி கைது - விமான நிலைய புலனாய்வுப் பிரிவினர்
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்கிய தாதி அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவைச் சேர்ந்த பாலகுமாரன் சண்முகநாதன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூருக்கு செல்வதற்காக பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது, விமான நிலைய புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா இடம்பெயர் முகாம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த குறித்த நபர், ஒரு லட்ச ரூபா லஞ்சமாக வழங்கி அங்கிருந்து கொழும்புக்கு தப்பிச் சென்றதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment