இந்தியா தப்பிவிட்டது
பிரபாகரனிடம் இந்தியாவை கொடுத்திருந்தால் அப்துல்கலாம் கனவு நிறைவேறியிருக்கும்:சீமான்
பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார்.
’’புலிகளை அழித்தால்தான் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தார்கள். அதற்கான வழிகளை எல்லாம் செய்தார்கள். அழித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தானும்,சீனாவும் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இது ஏன் இந்தியாவுக்கு புரியமாட்டேங்குது.
அண்ணன் பிரபாகரன் எப்போதுமே இந்தியாவை தன் நட்பு நாடாகத்தான் பார்த்துவந்தார். அதனால்தான் இந்தியாவை பாதுகாத்து வந்தார். ஆனால் சிங்களவன் இந்தியாவுடன் நெருங்கியே இருந்தான்.
இந்தியா-சீனா எல்லைப்பிரச்சனை வந்தபோது சீனாவுக்குத்தான் ஆதரவாக இருந்தான் சிங்களவன். இப்போதும் ஆதரவாகத்தான் இருக்கிறான். இந்தியா உள்நோக்கத்துடனேயே உதவுகிறது என்று சரத்பொன்சேகா சொல்லியிருக்கிறார். ஈழம் கிடைத்திருந்தால் எப்போதும் நட்பாகவே இந்தியா இருந்திருக்கும்.
2020ல் இந்தியா வல்லராக ஆகும் என்று அப்துல்கலாம் கனவுகண்டார். அந்த கனவு நிறைவேறுவது மாதிரி தெரியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் உண்மை.
பிரபாகரனிடம் இந்தியாவை ஒப்படைத்திருந்தால் 2020ல் அல்ல; இன்னும் 5 ஆண்டுகளிலேயே உலகின் மிக பெரும் தேசமாக இந்தியாவை மாற்றியிருப்பார். அப்துல்கலாம் கனவு வெகு சீக்கிரமே நனவாகியிருக்கும்’’என்று பேசினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment