சவூதியிலிருந்து நாடு திரும்பிய தமிழ் இளைஞரைக் காணவில்லை
சவூதி அரேபியாவில் கடந்த ஆறு வருடங்களாகப் பணியாற்றிவிட்டு நாடு திரும்பிய தமிழ் இளைஞரொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் புனித ஆசீர்வாதப்பர் வீதியைச் சேர்ந்த மகாலிங்கம் பிரசாத் (30) என்பவரே காணாமல் போயுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆம் திகதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் புறப்பட்டு 17 ஆம் திகதி காலை 8.20 மணிக்கு இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதனை விமான நிலைய தகவல் பிரிவினரும் பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் அதன் பின்னர் தனது இருப்பிடத்துக்கு திரும்பாததனையடுத்தே அவர்களது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் 071 4872275 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment