ராகுல்காந்திக்கு தொடர்ந்தும் புலிகளின் அச்சுறுத்தல்
இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ராகுல் காந்திக்கு எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களால் அதிக அளவிலான அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய புலனாய்வு துறையினர் எச்சரித்துள்ளனர். ஒருபக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு வந்தாலும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோருக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய சட்டமுறைகளின் கீழ் ராகுல்காந்திக்கு அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அடுத்த படியாக அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு விசேட பயிற்றப்பட்ட பாதுகாப்பு குழு ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அண்மையில் தமிழகத்திற்கான விஜயம் மேற்கொண்டிருந்த ராகுல்காந்தி நீண்ட தூர பாதைப் பயணங்களை மேற்கொள்வதை அறைமனதுடன் தவிர்த்துள்ளார்.
இதேவேளை ராகுல் மற்றும் அவரது தாயிற்கும் ஜெயிஸ் ஈ மொஹமட் போன்ற பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பின் அச்சுறுத்தலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ஜெயிஸ் ஈ மொஹமட் அமைப்பின் உறுப்பினர்கள் மூவரிடம் தனித்தனியே மேற்கொண்ட விசாரணைகளில் ராகுல்காந்தி அவர்களின் முதன்மை இலக்காக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
ராகுல்காந்தி தமிழகத்திற்கான தொடர்ந்தும் விஜயம் செய்யும் போது அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தமிழக பொலிசாரும் புலனாய்வு துறையினரும் இணைந்து செயற்படவுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment