ஐக்கிய நாடுகள் சபையின் உதவி தேவையில்லை என தடுப்பு முகாமில் உள்ள மக்கள் தெரிவிப்பு
தம்மை தொடர்ந்து தடுப்பு முகாம்களில் வைத்திருப்பதற்காக ஐக்கிய நாடுகளின் உதவி அவசியம் இல்லை என வவுனியா தடுப்பு முகாமில் உள்ள பொது மக்கள் சுயாதீனமான கருத்தை வெளியிட்டுள்ளனர். அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரதிநிதி வோல்ட்டர் கெலின் மொழிபரிவர்தனைகளுக்கு அப்பால் இடம்பெயர்ந்த மக்களை சந்தித்த வேளையிலேயே இடம்பெயர்ந்த மக்களால் இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா கதிர்காமர் நலன்புரி கிராமத்துக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர் அங்குள்ள மக்களின் கருத்துக்களை பெறுவதற்காக மொழி பரிவர்தனையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் அவர்களின் பரிவர்தனையில் சந்தேகம் கொண்ட கெலின் நேரடியாக அங்கிருந்த தமிழ் மக்களுடன் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஐக்கிய நாடுகள் சபையின் உதவிகளுக்கு இடம்பெயர்ந்தோருக்கு தேவையா என கேட்ட போது உதவிகள் தேவை இல்லை எனவும் தம்மை தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தாலே போதும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க வேண்டுமா என்பது குறித்து ஆராயும் பொருட்டே வோல்டர் கெலின் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
எனினும் அவர் முகாம்களில் உள்ள மக்களுடன் உரையாடும் போது அதனை ஆங்கிலத்தில் பரிவர்தனை செய்தவர்கள் பொய்யாக பரிவர்தனை செய்வதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே கெலின் இவ்வாறு தனித்து உரையாட தீர்மானித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment