கருணா தேசிய வீரராக கருதப்பட வேண்டும்: ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வழிகாட்டிய அமைச்சர் முரளிதரன் தேசிய வீரராக கருதப்படு வேண்டும் என ஆளும் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
முரளிதரனின் வழிகாட்டுதல்களும், அறிவுரைகளும் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெறாவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கப்பதில் சிக்கல் நிலை உருவாகியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹபராதுவை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க இராணுவ வெற்றிகளை ஈட்டுவதற்கு முரளிதரன் வழங்கிய பங்களிப்பு அளப்பரியதென அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment