அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கைக்கு அடுத்த தலையிடி
வன்னி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளின் அவல நிலை குறித்து "அல்ஜசீரா" தொலைக் காட்சிச் சேவை சுயாதீன விசாரணை அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.
இம்முகாம்களிலுள்ள அகதிகள் மற்றும் இம்முகாம்களில் மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டிருக்கும் மனிதாபிமானப் பணியாளர்கள் ஆகியோரை "அல்ஜீரா" பேட்டி கண்டுள்ளது.
தமிழ்ப் பிரஜைகளுக்கு எதிராகப் படுகொலைகள், யுத்தக் குற்றங்கள், கற்பழிப்புகள், கடத்தல்கள், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற கொடூர நடத்தைகள், கைதுகள் மற்றும் தடுத்து வைப்புகள் உட்பட வன்முறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் சர்வதேச சமூகம் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் "அல்ஜசீரா தொலைக்காட்சி" சேவை வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் மீது இலங்கை அரசினால் "அரச பயங்கரவாதம்" கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று தனது சொந்த ஆய்வு மூலம் வந்து செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் பிரபல தொலைக் காட்சி சேவைகளில் ஒன்றான "அல்ஜசீரா தொலைக் காட்சி" சேவை இலங்கை அரசுக்கு மற்றுமொரு தலையிடியாக மாறலாம் என்றும் சர்வதேச அரசியல் அவதானிகள் நம்புகின்றனர்.
ஏற்கனவே "சனல்04" தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகளால் இலங்கை அரசு பலத்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றமை தெரிந்ததே.
0 விமர்சனங்கள்:
Post a Comment