பிரித்தானியா வாழ் இடம்பெயர் தமிழர்கள் தொடர்பிலான இருவேறு கொள்ளைகள்
பிரித்தானியாவில் அரசியல் புகழிடம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கொண்டுள்ள இருவேறு கொள்கைகள் குறித்து வியாக்கியானம் செய்வதற்கு அந்நாட்டில் புகழிடம் கோரியுள்ள தமிழ் மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று பீ.பீ.சி செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்று குற்றஞ்சாட்டி வருகின்ற பிரித்தானிய அரசாங்கம், மறுபுறம் அந்நாட்டில் அரசியல் புகழிடம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்களை அங்கிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லண்டன், ஒஸ்லோவில் அமைந்துள்ள தமிழ் மக்கள் மத்திய நிலையத்தைச் சேர்ந்த தவராணி நகுலேந்திரன் பீ.பீ.சி.க்கு தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மாத்திரம் தனக்குத் தெரிந்த 12பேர் இவ்வாறு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு;ளனர் என்று பீ.பீ.சி.க்குத் தெரிவித்த தவராணி நகுலேந்திரன், மேலும் 50 பேரை இவ்வாறு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் அந்த நடவடிக்கைக்குப் பயந்த நிலையில் அவர்கள் அனைவரும் பல்வேறு பிரதேசங்களில் மறைந்திருந்து வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளதென்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் அறிக்கை ஒன்றினை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஆணையகம், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள தமிழ் மக்களை வெளியேற்றுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு அறிவித்தது.
இலங்கையிலுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் தமது வாழ்க்கை தொடர்பில் இன்னமும் சவாலானதொரு போக்கினையே கடைபிடித்து வருகின்றனர் என்றும் அந்த ஆணையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு நிலையில் பிரி;த்தானிய அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஆணையகம் வெளியிட்ட அறிக்கையினையும் மீறியே செயற்பட்டு வருகின்றது என்றும் அந்நாட்டில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment