நேற்று நடந்த மட்டக்களப்பு குண்டு வெடிப்பின் விபரம்
மட்டக்களப்பு நகரில் நேற்று பிற்பகல் 1.25 மணியளவில் பாரிய குண்டுச் சத்தமொன்று கேட்டது.
மட்டக்களப்பு பிரதேசத்தில் மீட்கப்பட்ட குண்டுகளை, கல்லடியிலுள்ள இராணுவ முகாமில் செயலிழக்கச்செய்யப்பட்டபோதே இப்பாரிய சத்தம் ஏற்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இப்பாரிய சத்தத்தினால் மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி போன்ற பகுதிகளிலுள்ள கட்டடங்களின் கண்ணாடிகள் உடைந்து நொருங்கியுள்ளதுடன், பல கட்டடங்கள் அதிர்ந்துள்ளன.
குறிப்பாக, கல்லடியிலுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக் காரியாலயத்தின் கண்ணாடிகள் நொருங்கியுள்ளன. அத்துடன் கல்லடியிலுள்ள இலங்கை மின்சார சபையின் அலுவலகத்திலிருந்த கண்ணாடிகளும் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment