புலிகளின் சிறைச்சாலை பொறுப்பாளர் கைது
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து புலி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் புலிகளின் சிறைச்சாலைகளுக்கு பொறுப்பாளர் எனவும். புலிகளினால் கைது செய்யப்படுவர்கள் இவரின் நேரடி கண்காணிப்பிலேயே சிறையில் அடைக்கப்பட்டு வந்துள்ளனர் எனவும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. முன்பு கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்ந்தும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவரைப் போன்றவர்களிடத்தில்தான் புலிகளால் வதைமுகாங்களில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களின் விபரம் அறிய முடியும் உரிமை கோரப்படாத பல கொலைகள் இனி மெல்ல வெளிவரும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment