கண்ணீரின் சாட்சியங்கள்.
மட்டுவில் வடக்கு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி காந்திமதி 89ம் ஆண்டு ஆடி மாதம் 19ம் திகதி அவளது வீட்டில் வைத்து தாய் சகோதரர்களுக்கு முன்னால் வைத்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாள். அவள் புலிகளால் கொல்லப்படும்போது அவளுக்கு வயது பதினெட்டு. ஆடி
மாதம் 18ம் திகதி அவளது பிறந்தநாள்.
அவள் செய்த குற்றம்தான் என்ன?
இந்தியப் படைக்கும் புலிகளுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம் அது. காந்திமதியைகாந்தன் என்று செல்லமாக அழைப்பார்கள்.அவளுடைய தந்தையார் கந்தசாமிஜேர்மனியில் இருந்தார்.
காந்திமதி யாழ் நகருக்கு வேலைக்குச் சென்றுவிட்டு தனது நண்பியுடன் வந்து கொண்டிருந்தாள். கைதடியில் உள்ள ஈ.பி.ஆர். எல்.எவ்முகாமில்; இருந்தவர்கள் அவர்களுடைய அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு நாளை வந்து பெற்றுக் கொள்ளும்படி கூறிவிட்டனர். ´
மறுநாள் தனது நண்பியின் தாயாரையும் அழைத்துக் கொண்டு காந்திமதி கைதடியிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினரின் முகாமுக்கு தனது அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளச் சென்றிருந்தாள்.தாயார் பரமேஸ்வரி தானும் கூடவருவதாகக் கேட்க தான் நண்பியின் தாயாருடன் செல்வதாகவும் நீங்கள் வரத் தேவையில்லையென்றுவிட்டு காந்திமதி சென்று விட்டாள். காந்திமதிதனது அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினரின் முகாமிற்குள் சென்றதைபுலிகளின் உளவாளி ஒருவன் கண்டிருக்கின்றான். இந்தத் தகவலை மட்டுவில் பகுதிப் பொறுப்பாளரான பாப்பாவிடம் கூறியிருக்கிறான்.
ஆனிமாதம் 19ம் திகதி காந்திமதி தனது தாயாரிடம் தனக்கு உழுத்தம் கழி சமைத்தத் தரும்படி கேட்டிருந்தாள். மாலை நேரம் தாயர் உழுத்தம் கழி தயாரித்துவிட்டு பாத்திரங்களைக் கழுவி பரணில் காய வைப்பதற்காக வெளியில் சென்றார். அப்போது அங்கிருந்து சிலர் ஓடுவதைக் கண்டார். இருந்தும் பரமேஸ்வரி அவர்களைக் கூப்பிட்டு ஏன் தம்பி ஓடுகிறீர்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.இல்லையம்மா பாப்பா காந்திமதியோடு பேசவேண்டும், அவளைவெளியில் அனுப்புங்கள் என்று சொன்னார்கள். இது இரவுநேரம் மகளை வெளியில் விட முடியாது உள்ளே வாருங்கள்பேசலாம் என்று பரமேஸ்வரி அழைத்தார். கேற் வழியாக´மேலும் சிலர் உள்ளே வந்தனர். உள்ளே வந்ததும் காந்திமதி´மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அந்த இடத்திலேயே காந்திமதி இறந்தாள்.
சாவகச்சேரிப் பகுதியில் தமிழ்ச்செல்வனுடன் சேர்ந்து பல கொலைகளுக்குப் பொறுப்பான புலிக் கொலைஞன் பாப்பா.இவன் வன்னியில் பலரது பிள்ளைகளைக் கடத்துவதற்கும் பொறுப்பாக இருந்தவன். புலிகளின் விளையாட்டுப் பொறுப்பாளர் பாப்பாவிற்கு கொலையும் பிள்ளை பிடியும் இவனது விளையாட்டு. இன்று இலங்கை ராணுவத்திடம் சரணடைந்துள்ளான்.
காந்திமதி எந்தக் குற்றமும் செய்யவில்லை.இந்தக் கொலையில் புலிகளின் பொறுப்பாளர்கள் பாப்பாவும் குணாவும் நேரடியாகச் சமபந்தப் பட்டிருந்தனர். காந்திமதியை நன்றாகத் தெரிந்த பெண் ஒருவர் பாப்பாவிடம் ஏன் காந்திமதியைக் கொன்றீர்கள், அவள் உங்களுக்கு எதிராக எதும் செய்யவில்லையே என்று கேட்டதற்கு, தங்களுக்குத் தவறான தகவல் கிடைத்ததாகவும் தாங்கள் தவறுக்கு மன்னிப்புக் கோருவதாகவும் கூறினார். இன் மன்னிப்புக் கோரி என்ன பலன், போன காந்திமதியின் உயிர் திரும்பி வரவா போகிறது! சில நாட்களில் புலி உறுப்பினர் குணா இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டார். அந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட பலர் கொல்லப்பட்டுவிட்டனர்.
இன்று பாப்பா இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து தனது
சக உறுப்பினர்களையே காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஈழநாசம்
0 விமர்சனங்கள்:
Post a Comment