வவுனியாவில் இரு பெண் புலிகள் கைது ஒருவர் ஸ்தலத்தீலேயே தற்கொலை.
வவுனியா உப்புளும பிரதேசத்தில் தற்கொலைதாரிகள் என சந்தேகிக்கப்படும் இரு பெண்புலிகளை பொலிஸார் கைது செய்தபோது அவர்களில் ஒருவர் ஸ்தலத்திலேயே சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.
காலிப்பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா விரைந்த காலி விஷேட பொலிஸ் பிரிவினர், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரின் உதவியுடன் குறிப்பிட்ட பெண்புலிகள் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து அவர்களைக் கைது செய்தபோது ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.
இவ்வீடு புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினர் நெருப்பு என்பவருக்கு சொந்தமானது எனவும், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அப்பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதைத்து வைத்திருந்த தற்கொலை அங்கிகள் 3, சீ4 ரக வெடிமருந்துகள் 6 கிலோக்கிராம், டெற்னேற்றர்கள் 10 என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment