எட்டி நட....
கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. மிக மிகக் கவனமாக... ஒவ்வொரு அடியையும்
அவதானமாக எடுத்து வைக்க வேண்டியநேரம் இது. மிக மிக அவதானமாக... ஏனென்றÖல் இதுவரை காலமும் எங்களைக் காவாந்து பண்ண ஒருவர் இருந்தார். அவர் சுட்டுவிரலால் சுட்டிக் காட்ட அதைச் செய்ய நாம் தயாராக இருந்தோம். எங்கும் சென்றோம். எதிலும்
வென்றோம். ஆனால் இப்பொழுது அவர் என்னென்ன காரணங்களாலோ திரையில் (Screen)
இல்லை. அதனால் தான் சொல்கிறோம். மிக மிகக்கவனமாக மிக மிக அவதானமாக நாம் இருக்கவேண்டும்.
எங்களுக்கு இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதா? இல்லை. இலங்கையில் தமிழர்களுக்கு
ஏதாவது சிறு உரிமையாவது கிடைத்ததா? அதுவும் இல்லை. இந்த `இல்லை' என்ற சொல்லைத்தான் இன்னமும் சொல்ல வேண்டியிருக்கிறது.போதாக்குறைக்கு மூன்று லட்சம் ஈழத் தமிழர்அகதிகளாக வதைமுகாமில் சிதைகின்றனர்.அங்கிருந்து தினம் தினம் காணாமல் போவோர் பலர்.
எமக்காகத் தம் இன்னுயிரை இழக்கத் தயாராக இருந்த எம் போராளிகள் எவ்வளவு சித்திரவதைப் படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள்.இவை யாவும் எங்களுக்கு வலிந்து கூறும்
செய்தி என்ன? `இலங்கையில் தமிழர்கள்அடிமைகள்' என்ற செய்தியன்றி வேறென்னவாக
இருக்க முடியும்?
ஆண்டாண்டு காலமாக என்னப்பர், அவரப்பர், அவரப்பர் தொடக்கம் என் பிள்ளை, அவன்
பிள்ளை, அவன் பிள்ளை வரை அடிமை வாழ்வுதானே எமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. சிங்கள
அரசு செய்யும் இந்த அடாத்துகளுக்கு சர்வதேச சமூகமும் துணை போவது தான் மகா வேதனை.
காரணமென்ன, ஏன் இந்த அழிப்பு நிகழ்கிறது என்று கேட்க, எங்களுக்காகக் கேட்க உலகில்
எவரும் இல்லை. எதற்காக இந்தக் கொடுமை நிகழ்கிறது என்று கேட்க ஒருவரும் இல்லை.
ஆறரைக் கோடித் தமிழர் அயலில் இருந்தார்கள்.இருபது மைல் இடைவெளியில் இருந்தார்கள்.
அவர்கள் துடித்தார்கள், துவண்டார்கள், மனம்வெதும்பினார்கள்.
ஆனால் அவர்களுக்கென்றுஒரு அரசு இருக்கவில்லை. அவர்களுக்கென்று உணர்வு செறிந்த, ஓர்மம் மிகுந்த தலைமை இருக்கவில்லை. அவர்கள் என்ன செய்வார்கள் பாவம். முத்துக்குமாரன் தொடக்கம் பன்னிரண்டு தமிழர்கள் தீக்குத் தங்களைத் தின்னக் கொடுத்து உணர்வைக் காட்டினார்கள். அதுவே மிகப் பெரும் காரியம்.இப்பொது நாம் ஈழத்தமிழர் பத்து லட்சம்பேர் கண்டம் கண்டமாகப் பிரிந்து நிற்கிறோம்.நாடு நாடாக அலைந்து தரிகிறோம். கவனியுங்கள்.பிரிந்து போய்த் தான் நிற்கிறோம். ஆனால் பிளவுண்டு போய் நிற்கவில்லை.சிதைந்து போய்த்தான் நிற்கிறோம். ஆனால் அழிந்து போய் நிற்கவில்லை. உடல் தான் பிரிந்து நிற்கிறது,உள்ளம் ஒருமித்த உணர்வுடன் ஓர்மத்துடன் சேர்ந்து நிற்கிறது.
அதனால் தான் சொல்கிறோம், நமக்குத்தேவை மிக மிகக் கவனம். மிக மிக அவதானம்.
இப்போதுள்ள பலவீனமான நிலமையைப்பயன்படுத்தி எதிரிகள் உள்நுழைவர். எமக்கு
வழிகாட்டி இல்லையே என்ற தன்மையைப்பயன்படுத்தி எங்கள் எதிர்ச் சக்திகள் எங்களைக்
குழப்பும். குழப்பிக் குழப்பி அழிக்கும். சுலபமானதிசையில் அவர்கள் பயணப்பட சூழல்ஏதுவாகிவிட்டது. நாங்களும் காற்றை அவர்கள்போகும் திசை பார்த்தே வீச வைக்கின்றோம்.
பலவீனமான தருணம் மாத்திரம் காரணமல்ல.எங்களுடைய பலவீனமான மனங்களும்
காரணம். நாம் உணர்ச்சிப் பெருக்கில் கொந்தளிக்கிறோம். வெற்று ஆரவாரக் கூச்சலில்
திளைக்கிறோம். உண்மைகளைப் பார்க்க மறுக்கிறோம். எமக்கு விரும்பியதையே உண்மை
களாக ஏற்கிறோம். யதார்த்தத்தைப் பற்றிதுளியேனும் சிந்திக்கவில்லை.
எமது மக்களைப் பற்றிய எனது குற்றச்சாட்டு என்று தயவு செய்து நினையாதீர்கள். ஒதுக்கி
விடாதீர்கள் நான் என்னையும் சேர்த்துத் தான்சொல்கிறேன். இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கும்
நானும் உரியவன். நானும் எல்லோர் மாதிரியும்இருந்தேன். உணர்ச்சி வசப்பட்டேன். உரக்கக்
கொட்டு முழக்கினேன். அதை நம்பவில்லை.இதை மறுத்தேன். என்று எல்லாக் குற்றச்
சாட்டுக்களையும் என் மீதும் போடலாம்.
அதனால் இவ்வாறு எழுதுவது விமர்சனம் -சுயவிமர்சனம் என்றும் எடுக்கலாம்.
இப்பொழுது கண்விழிக்க வேண்டும் நண்பர்களே. நாங்கள் யார், அயலவன் யார், அந்நி
யன் யார், எதிரி யார், ஏவுபவன் எவன் என்றெல்லாம் சிந்திக்க வேண்டிய தருணம்
இது. ஒட்டுமொத்தமாக ஒன்றைச் சொல்லலாம்.
நாங்கள் அரசியல் மயப்பட வேண்டும்.அரசியலாக எதையும் சிந்திக்க வேண்டும்.
அரசியலால் எதனையும் பார்க்க வேண்டும்.எல்லா அசைவுகளுக்கும் பின்னால் எல்லாக்
கருத்துகளுக்கும் பின்னால் அரசியல் உண்டு தோழர் மாவோ ஒன்று சொன்னார் `யுத்தம்
என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல்என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்' நாங்கள்
நிறைய இரத்தம் சிந்தி யுத்தம் என்ற அரசியல் செய்து விட்டோம். இனி இயலாது. இனி இரத்தம் சிந்தாத யுத்தத்தைச் செய்வோம். அதில் நாம் ஒருபோதும் ஓயப் போவதில்லை.
இந்த இடத்தில் நம் தமிழக உறவுகளுக்கும்எமது தாழ்மையான விண்ணப்பத்தைத் தெரிவி
க்க வேண்டும். நெடுமாறன் ஐயா, வைகோ,திருமாவளவன், இரரமதாஸ், சீமான், சுபவி,
தியாகு, கொளத்துÖர் மணி, அறிவுமதி விடுதலை இராசேந்திரன், சத்தியராஜ், மணிவண்ணன்,ஜெகத் கஸ்பார், தாமரை என்று இன்னும் பல தமிழின உணர்வாளர்களை, தமிழீழ ஆதரவாளர்களை நாம் நெக்குருகி நெஞ்சு ஞஉறைந்து
நேசிக்கிறோம். அவர்களின் ஈழத்தமிழர் மீதான ஈர்ப்பைக் கண்டு தாள் பணிகிறோம்.
ஆனால் ஒன்றே ஒன்று சொல்கிறோம். எங்களுக்குஇனி எதிரிகள் என்று எவரும் வேண்டாம். நாம்பட்டது போதும். நொந்தது ஆயிரம். இதற்கு மேலும் உலகில் எந்த இனமும் பட்டிருக்கப்
போவதில்லை என்கின்ற அளவிற்கு நாங்கள் பட்டு விட்டோம். ஒவ்வொன்றையும் நினைக்கும்
போதும் நெஞ்சில் இரத்தம் வடிகின்றது என்ற வாக்கியம் கூடப் போதாது.
எங்களை வைத்துத் தயவு செய்து உங்கள் உள்நாட்டு அரசியல் செய்யாதீர்கள் உங்கள் உள்நா
ட்டு அரசியலால் நாங்கள் எவ்வளவு இழந்தோம் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
இமயமலையையே நாங்கள் இழந்து விட்டோம்.எங்களுக்கு இனி எதிரிகள் என்று எவரும்
இல்லை. ஒரே ஒன்று தான் எதிரி. சிங்கள பௌத்த பேரினவாதம் என்ற அந்த ஒரே ஒன்று தான் எதிரி.எங்களுக்குக் கலைஞர் கருணாநிதியும் வேண்டும். செல்வி ஜெயலலிதாவும் வேண்டும். எல்லோரும் வேண்டும். தயவுசெய்து விநயமாக வேண்டுகிறோம்.
மற்றுமொன்று, உங்கிருந்து அவன் கள்ளன் இவன் துரோகி என்று எதுவும் சொல்லாதீர்கள்.
கள்வனையும் துரோகியையும் நாங்கள் இனங்காண்போம். நாங்கள் இப்பொμது மீகாமன்
இல்லாத கப்பலில் தவிக்கிறோம். வலவன்ஏவாத வானவூர்தியில் துடிக்கிறோம். ஒரு சிறு
வெளிச்சப் பொட்டாவது தெரியாதா என்று ஏங்கித்தவிக்கிறோம். காலம் எங்களைத் தின்கிறது.சாவு எங்களை விμங்குகின்றது. ஒரே அந்தகார இருட்டில் வீழ்ந்து கிடக்கிறோம். எங்களை எழுப்பி விட ஏதும் செய்யுங்கள். உசுப்பி விட ஓர்மம் தாருங்கள். அதைத் தான் பணிவாகக் கேட்கிறோம்.
நம்புங்கள் எம் தமிழ் உறவுகளே. நாங்கள் மீண்டெழுவோம். வெல்வோம். வாழ்வோம். இது
உறுதி.
சேயோன்
0 விமர்சனங்கள்:
Post a Comment