பிரபல பிரெஞ்சு இயக்குனர் பொலன்ஸ்கீ சுவிட்சர்லாந்தில் கைது
சூரிச் திரைப்பட விழாவில் வாழ்சாதனையாளர் விருதினைப் பெற்றுக் கொள்வதற்காக பொலன்ஸ்கீ சுவிட்சர்லாந்து வருகை தந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
76 வயதான பொலன்ஸ்கீ 1978ம் ஆண்டில் அமெரிக்காவினால் பிறப்பிக்கப்பட்ட பிடி விராந்திற்கு அமைய கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்து நீதி அமைச்சினால் விடுக்கப்பட்ட சர்வதேச கைது செய்யும் கோரிக்கை ஒன்றை தாம் நிறைவேற்றி உள்ளதாக சூரிச் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
2005ம் ஆண்டு வரையிலும் அமெரிக்காவினால் பொலன்ஸ்கீ தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரபலங்களோ அல்லது சாதாரண மனிதரோ அனைவரும் நாட்டின் சட்டம் ஒரே மாதிரியாகவே அமுல்படுத்தப்படும் என நீதி அமைச்சர் எல்வின் விட்மிர் தெரிவித்துள்ளார்.
1970களில், 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என பொலன்ஸ்கீ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலன்ஸ்கீயின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பெர்னாட் குச்னார், சுவிஸ் வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment