யார் இந்த தமிழ்செல்வன்?
இளையவர்கள், நடுத்தர வயதுடையோர் என பாராபட்சம் இல்லாது தமது இயக்கத்திற்கு எதிரானவர்களை எல்லாம் மண்டையில் போட்டவர். இவருக்கு இத்தகைய திறமை இருப்பதினை கண்டு பெருமை கொண்ட புலிதலைவர் இந்திய படையினருடான மோதலின் போது பொட்டம்மானை எப்படியாவது வன்னிக்குள் கொண்டு வந்து சேர்ப்பது உனது பொறுப்பு என கூறிவிட்டு வன்னி சென்றார்.அதே போன்று பாதுகாப்பாக பொட்டம்மானை அவர் வன்னி கொண்டு சேர்த்தும் இருந்தார்.
1993 ஆம் ஆண்டு இடம்பெற்ற பூனைகரி மோதலில் ஈடுபட்ட இவருக்கு ஒரு காலில் கடும் காயம் ஏற்பட்டதினால், ஊன்றுகோலின் உதவியுடன் உலாவ வேண்டி வந்தது.
சுழிபுரத்தில் திருமணம் முடித்த சு.ப
வட மாகாணத்தில் கரையோரமாக மாதகலுக்கு நெருக்கமாக உள்ள சுழிபுரம் முன்னர் புளொட் இயக்கத்தின் கோட்டையாக இருந்தது. அந்த இயக்கத்தின் ஆணி வேராக இருந்த புதியபாதை ஆசிரியர் தோழர் சுந்தரமும் சுழிபுரத்தினை சேர்ந்தவரேயாவார். இங்கு தாழ்த்தப்பட்ட சமூகம் என்று அழைக்கப்படுகின்ற (தலித்துக்கள்) சமூகத்தினை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், உயர்ந்த சாதியினர் என்று தம்மை அழைக்கும் குடும்பத்தினை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருந்தது. புளொட் இயக்கத்தினர் இந்த காதலுக்கு ஆதரவு கொடுத்து திருமணம் முடிக்கவும் உதவி புரிந்திருந்தனர். இதனால் புளொட் இயகத்தினர் மீது கோபம் கொண்ட பெண்ணின் குடும்பத்தினை சேர்த ஒரு பெண்மணி அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக புலிகளை அழைத்து வந்து தனது காணிக்குள் தங்க வைத்தார்.
அங்கு வந்து சென்ற தமிழ்செல்வன் பின்னர் அந்த பெண்மணியின் மகள் மீது காதல் கொண்டு அழைத்து சென்றார். தமிழ்செல்வன் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் முடித்தாக சிலர் கூறுகின்ற போதிலும் அதற்கான ஆதாரம் இல்லை. மொத்தத்தில் பாலுக்கு பூனையை காவல் வைத்தது போன்று அந்த பெண்மணியின் கதை ஆகிப்போனது.
புலி தலைவர்களின் திருமணங்கள் சீர்சிருத்தமானவை, உண்ணாவிரதம் இருந்த பெண்ணை காப்பாற்றுவதாக கூறி கடத்திச் சென்று காதல் கொண்டார் புலிகளின் தலைவர், புலிகளின் வான்பிரிவை ஆரம்பித்த சங்கர் தனது சகோதரரின் மனைவியை கை பிடித்தார், மாத்தையா இயக்க தோழர் சீலனின் மனைவிக்கு வாழ்க்கை கொடுததிருந்தார். இவ்வாறாக தமிழ் சமூகத்திற்கு எடுத்து காட்டாக இவர்களின் திருமணங்கள் அமைந்து விட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment