சிதார் இசை கலைஞர் ரவிசங்கரின் மகளை மிரட்டிய தொழிலதிபர் கைது
சிதார் இசை கலைஞர் ரவிசங்கரின் மகள் அனுஷ்காவை பல கோடி கேட்டு மிரட்டிய மும்பை தொழிலதிபர் போலீசில் சிக்கினார். பிரபல சிதார் இசை கலைஞர் பண்டிட் ரவிசங்கர். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவரது மகள் அனுஷ்கா (28) டெல்லியில் வசித்து வருகிறார். இவரும் சிதார் இசை கலைஞர்தான். அனுஷ்காவிடம் பணம் கேட்டு இமெயிலில் மிரட்டல் வந்துள்ளதாக டெல்லி போலீசில் ரவிசங்கர் கடந்த மாதம் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அனுஷ்காவின் சில ரகசிய போட்டோக்களை வெளியிடாமல் இருக்க பல கோடி ரூபாய் கேட்டு மர்ம ஆசாமி மிரட்டுவது தெரியவந்தது. தீவிர விசாரணைக்கு பின், அனுஷ்காவின் இமெயில் முகவரியில் இருந்த அந்த போட்டோக்களை அந்த ஆசாமி திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், பணம் கேட்டு அனுஷ்காவை மிரட்டியதாக மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஜூனைத்(29) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஜூனைத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
அனுஷ்காவுக்கு ஜூனைத் ஏற்கனவே அறிமுகமானவர்தான். ஆனால், ஜூனைத்தின் நடத்தை சரியில்லாததால் அவரது நட்பை அனுஷ்கா துண்டித்துள்ளார். இதனால், ஜூனைத் ஆத்திரம் அடைந்துள்ளார். அனுஷ்காவின் இமெயில் முகவரியின் பாஸ்வேர்ட் தெரிந்ததால், அதை பயன்படுத்தி இமெயிலில் அனுஷ்கா வைத்திருந்த சில ரகசிய போட்டோக்களை திருடி யுள்ளார். அந்த போட்டோக்களை வெளியிடாமல் இருக்க தனக்கு பல கோடி தர வேண்டும் என்று அனுஷ்காவை இமெயிலில் மிரட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment