நாளைய ஐநா சபைக்கூட்டத்தில் இந்திய சிறுமி உரை
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் யுக்ரத்னா ஸ்ரீவாஸ்தவா (வயது 13). இவர் லக்னோவில் உள்ள ஜெயின் பிடெவிஸ் கல்லூரியின் 9ஆவது வகுப்பு மாணவி.
'துன்ஷா' (வளர்ச்சி) என்ற இளைஞர் அமைப்பில் இவர் உள்ளார். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. சபையில் உலக சுற்றுச்சூழல் குறித்த கூட்டம் நாளை (22ஆந் திகதி) நடைபெறுகிறது. இதில் இந்திய குழந்தைகள் சார்பில் சிறுமி யுக்ரத்னா ஸ்ரீவாஸ்தவா கலந்து கொள்கிறார்.
அங்கு அவர், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 100 நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் 'பூமியில் சீதோஷ்ண நிலை மாற்றம்' என்ற தலைப்பில் பேசுகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
"நமது முன்னோர்கள் மிகவும் நேர்த்தியான கிரகமாக பூமியை நமக்குத் தந்தனர். முன்பு அது பசுமையாக இருந்தது. தற்போது அது மிகவும் பாழ்படுத்தப்பட்டுள்ளது.
அதை மாசுபடுத்தி மிகவும் மோசமான கிரகமாக நாம் மாற்றி விட்டோம். இது சரியல்ல” என்றார்.
மேலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கும் இவர் செய்தி அனுப்பி வைத்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment