பழைய பழி தீர்க்க தந்தையின் கரங்களை வெட்டிய தனயன்
தன்னை பல வருடங்களாக உடலியல் ரீதியாக துஷ்பிரயோகப்படுத்தி வந்த தந்தையை பழிவாங்க அவரது இரு கரங்களையும் வெட்டித் துண்டித்த 17 வயது மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் தாய்வானில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி மகன் தனது தந்தை (37 வயது) வீட்டில் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தவேளை, அவரது இரு மணிக் கட்டுகளையும் கத்தியால் வெட்டி துண்டித்துள்ளார். விவõகரத்து பெற்ற கொல்லரான மேற்படி தந்தையின் வெட்டப்பட்ட இரு கரப் பகுதிகளையும் மருத்துவர்கள் உடனடியாக மீளப் பொருத்தியதையடுத்து அவர் தேறி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மகன் பராயமடையாதோர் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
0 விமர்சனங்கள்:
Post a Comment