14 வயது மகனை 4 வருட காலமாக அலுமாரியில் அடைத்து வைத்த தாய்
மேற்படி சிறுவன் தனது வீட்டிலிருந்து தப்பியதையடுத்தே, இந்த இரகசியம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிறுவனின் தாயாரான லாரொண்டா மக்கோலும் (LaRhonda McCall) (37 வயது) அவரது காதலரான ஸ்டீவ் வேர்ன் ஹமில்டனும் (Steve Vern Hamilton) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டை விட்டு தப்பி வந்த சிறுவன் உடல் முழுக்க காயங்களுடன் அழுக்கடைந்த நிலையிலும் பசியுடனும் காணப்பட்டதாக அதிகாரிகள் தெவித்தனர்.
நான்கரை வருடங்களுக்கு முன் நியூ ஜெர்ஸியிலிருந்து ஒக்லஹொமா நகருக்கு வந்தது தொடக்கம் சிறுவன் அவனது தாயாரால் கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
லாரொண்டா சிறுவனை அடித்து உதைத்து துன்புறுத்தியது மட்டுமல்லாமல், அவனது உடலில் அற்ககோலை ஊற்றி தீ வைத்தும் உள்ளதால் சிறுவனது உடம்பில் எரிகாயத் தழும்புகள் காணப்பட்டதாக தெவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment