புலிகளுக்கு ஆதரவளிப்பதை சட்ட ரீதியாக்கும் முயற்சிக்கு ஒபாமா நிர்வாகம் எதிர்ப்பு
விடுதலை புலிகளுக்கும் துருக்கியிலுள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக்கும் ஆதரவளிப்பதை சட்ட தியாக்க முயற்சிசெய்யும் லொஸ் ஏஞ்சல்ஸ் மனித உரிமைகள் காப்பகம் ஒன்றின் மனுவுக்கு எதிராக ஒபாமா நிர்வாகம் தாக்கல் செய்த மேன்றையீட்டு மனுவை அமெரிக்க உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவிருக்கிறது.
வெளிநாட்டு பயங்கரவாதக் குழு ஒன்றுக்கு ஆதரவளிப்பது ஒரு குற்றச்செயல் எனக்கூறும் சட்டம், அரசியல் யாப்புக்குப் பொருத்தமானதாக இல்லை என்று தெரிவித்து, அந்தச் சட்டத்தை விலக்கிய அமெரிக்க உயர்நீதிமன்றத் தீர்ப்பை தற்போது மறுபசீலனை செய்ய நீதியரசர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.
விடுதலைப் புலிகளுக்கும் துருக்கியிலுள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக்கும் ஆதரவளிக்க விரும்பும் குழுக்களும், தனிப்பட்டவர்களும் மேற்படி மனுவை தாக்கல் செய்திருந்தனர். இரண்டு இயக்கங்களையும் இராஜாங்கத் திணைக்களம், பயங்கரவாதக் குழுக்கள் என்று பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
துருக்கியில் பி.கே.கே. என்றழைக்கப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக்கும் பிரதான குர்திஸ்தான அரசியல் கட்சிக்கும் லொஸ் ஏஞ்ஜல்ஸ் மனித உமைக் காப்பகமான மனித உரிமைகள் சட்டப் பிவு ன்னர் மனித உரிமை ஆலோசனைப் பயிற்சிகளை அளித்துவந்தது.
கடல் கடந்த நாடுகளில் சட்டதியானதும் அகிம்சை ரீதியாலானதுமான செயற்பாடுகளுக்கான ஆதரவை புதுப்பிக்கும் முயற்சியில் 1998ஆம் ஆண்டின் மனிதநேய சட்டப் பிரிவும் ஏனைய குழுக்களும் வழக்கை தாக்கல் செய்தன.
1996ஆம் ஆண்டில் முதல்றையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தச் சட்டம், அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் ஆதரவுடன் அமெரிக்க தேசாபிமான சட்டத்தினால் வலவூட்டப்பட்டு, செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர் காங்கிரஸினால் அங்கீகரிக்கப்பட்டது. மீண்டும் 2004ஆம் ஆண்டில் இச் சட்டம் திருத்தியமைக்கப்பட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment