சொத்துக்களை முடக்கி கொண்டு தப்பியோடுவதில் புலம்பெயர் புலிகள் தீவிரம்!
புலம் பெயர் நாடுகளில் தமிழீழ மண்மீட்பு நிதி என்று திரட்டப்பட்ட பணத்தினை முடக்குவதில் புலம்பெயர் புலிகள் தீவிரம். கடந்த மே 18ம் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து புலம்பெயர் நாடுகளின் புலிகளுக்குள் முரண்பாடுகளும் விரிசல்களும் தலைவிரித்தாடி வருகின்றன.
வாங்கப்பட்ட சொத்துக்களை பிரிப்பது, சேகரிக்கப்பட்ட நிதியை பங்கீடுபோட்டு கொள்வது போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, பிரிட்டன், ஜேர்மன், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் தனிநபர் பெயர்களில் வாங்கப்பட்ட வர்த்தக நிலையங்கள, உணவகங்கள், ஆலயங்கள், ஊடகங்கள் என்பனவற்றை பங்கீடுபோடுவது அவ் முதலீடுகளை விற்று பணத்தினை எடுத்துக் கொண்டு வேறு மாநிலங்கள், நாடுகளில் தமது சொந்த தொழில்கள் என்று ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் மிக தீவிரமாக ஜரோப்பிய நாட்டில் இடம்பெற்று வருகின்றது.
வன்னியில் யுத்தம் இறுதிகட்டத்தை அடைந்து கொண்டிருந்தபோது கூட சுவிற்சர்லாந்தில் உள்ள தமிழ்மக்கள் மத்தியில் புலிகள் பெருமளவு நிதியை திரட்டியுள்ளனர். பல தமிழ்மக்களை கொண்டு வங்கிகளில் கடனாக பணம் எடுத்து தரும்படி கோரி 10,000 தொடக்கம் 25,000 வரையிலான சுவிஸ் பிராங்குகள் கடனாக எடுத்து கொடுக்கப்பட்டதும். இதனால் கடன் எடுத்து கொடுத்தவர்களின் குடும்பங்களிற்குள்ளேயே குடும்ப பிரச்சினைகளும் எழுந்துள்ளன.
நிதி எவ்வாறு எல்லாம் சேகரிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் சேகரித்த புலிகள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். பனியிலும், குளிரிலும் உழைத்து சம்பாதித்த பணத்தினை சுறண்டிக்கொண்ட புலிகள் இன்று அவ் பணத்துடன் தமக்கென்று ஒர் உல்லாச வாழ்வை மேம்படுத்திக்கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.
இவைமட்டுமல்ல வெளிநாடுகளில் தனிநபர் பெயர்களில் வாங்கப்பட்ட முதலீடுகளையும் விற்றுக்கொண்டு நிதி சேகரிப்பில் ஈடுபட்ட புலிகளும், புலிகளுக்காக முன்நின்று மாவீரர், பொங்குதமிழ், என்று எழுச்சிகளை ஏற்படுத்தி செயற்பட்டு வந்த புலிகளும் தலைமறைவாகி வருகின்றனர் என ஜரோப்பாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-பிரான்ஸ் நிருபர்
neruppu.com
0 விமர்சனங்கள்:
Post a Comment