நக்ஸலைட்டுகளின் பிரதான இலக்கு மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
திரினாமுல் மறைமுக ஆதரவு
மமதா பானர்ஜி
நக்ஸலைட்டுகள் எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸம்)யை இந்திய அரசாங்கம் நான்கு மாதங்களுக்கு முன் தடை செய்தது. எனினும் சில மாநிலங்களில் இப்போதும் மாவோயிஸ்டுகள் தங்கள் பலத்தை இழக்கவில்லை. மேற்கு வங்காளத்தை உதாரணமாகக் கூறலாம்.
நக்ஸலைட்டுகளின் மாவோயிஸக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு வங்காளத்தில் கூடுதலான கவனம் செலுத்துவதற்குக் காரணம் உண்டு. மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்யும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் நக்ஸலைட்டுகளின் தாய் வீடு எனக் கூறலாம்.
மமதா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1967 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தது.
புதிய அரசாங்கம் பதவியேற்று மூன்று மாதம் முடிவடைவதற்குள் நக்ஸல்பாரி என்ற கிராமத்தில் விவசாயிகளின் கிளர்ச்சியொன்று இடம்பெற்றது.
இது நிலச் சுவீகரிப்பாகவும் நிலச்சுவாந்தார்களுக்கு எதிரான வன்முறையாகவும் வடிவெடுத்தது. ஆளும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களே இக்கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார்கள்.
பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பதற்கு மேற்கொண்ட முயற்சி பலிக்காத நிலையில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதற்காக மாநில அரசாங்கம் பொலிஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.
நக்ஸல்பாரி இயக்கத்துக்கு ஆதரவாகச் செயற்பட்ட மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், விவசாயிகளின் கிளர்ச்சியை மாநில அரசாங்கம் பொலிஸ் அதிகாரத்தைப் பிரயோகித்து அடக்கியது எனக் குற்றஞ்சாட்டி, கட்சியிலிருந்து வெளியேறினர்.
மேற்கு வங்காளத்தில் மாத்திரமன்றி வேறு மாநிலங்களிலும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நக்ஸல்பாரி இயக்க ஆதரவாளர்கள் வெளியேறினார்கள்.
இவ்வாறு வெளியேறியவர்களில் மேற்கு வங்காளத்தில் சாரு மஸ¤ம்தாரின் தலைமையிலும் ஆந்திரப் பிரதேசத்தில் சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நாகிரெட்டியின் தலைமையிலும் வெளியேறியவர்களே கூடுதலானோர். எல்லா மாநிலங்களிலும் இப்படி வெளியேறியவர்கள் நக்ஸலைட்டுகள் என அழைக்கப்பட்டனர்.
நக்ஸலைட்டுகள் 1969 ஏப்ரல் மாதத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்ற பெயரில் புதிய கம்யூனிஸ்ட் கட்சியொன்றை ஆரம்பித்தனர். இக்கட்சியின் முதலாவது பொதுக் கூட்டம் 1969 மே தினத்தன்று கல்கத்தாவில் நடைபெற்றது.
சிறிது காலத்தின் பின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மூன்றாகப் பிளவுபட்டது. மூன்று பிரிவுகளும் இப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸம்) என்ற பெயரில் ஒன்றாகச் சேர்ந்திருக்கின்றன. இந்தக் கட்சியையே இந்திய அரசாங்கம் தடை செய்தது.
மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது கொண்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறியவர்களே நக்ஸலைட்டுகள் என்பதால் அவர்கள் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தங்கள் பரம வைரியாகக் கருதுவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.
நக்ஸல்பாரி கிளர்ச்சியைத் தொடர்ந்து 1967 நவம்பர் மாதத்தில் மேற்கு வங்காளத்தின் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டது. பின்னர் 1977ம் ஆண்டு பதவிக்கு வந்த மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி முன்னணி இன்று வரை ஆட்சியில் இருக்கின்றது.
மேற்கு வங்காளத்தில் காலூன்றி மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இலக்கு வைத்துச் செயற்படுவதற்கு நீண்ட காலமாக நக்ஸலைட்டுகள் மேற்கொண்ட முயற்சி அண்மையிலேயே பலித்தது.
மத்திய அமைச்சர் மமதா பானர்ஜியின் தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் நக்ஸலைட்டுகளுக்குக் கைகொடுத்ததா அல்லது நக்ஸலைட்டுகள் திரினாமுல் காங்கிரஸ¤க்குக் கைகொடுத்தார்களா என்பது ஆய்வுக்குரிய விடயம். எவ்வாறாயினும் திரினாமுல் காங்கிரஸ¤டனான உறவுக் கூடாகவே நக்ஸலைட்டுகள் மேற்கு வங்காளத்தில் காலூன்றியுள்ளனர்.
இடதுசாரி முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக நந்திகிராமிலும் சிங்கூரிலும் திரினாமுல் காங்கிரஸ் ஆரம்பித்த போராட்டத்தில் நக்ஸலைட்டுகளும் இணைந்து கொண்டார்கள். இரசாயணத் தொழிற்சாலை அமைப்பதற்கு நந்திகிராமிலும் மலிவு விலைக் கார்த் தொழிற்சாலை அமைப்பதற்கு சிங்கூரிலும் மாநில அரசாங்கம் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியதற்கு எதிராகவே மேற்படி போராட்டங்கள் ஆரம்பித்தன.
நக்ஸலைட்டுகள் வந்து சேர்ந்ததும் இரண்டு போராட்டங்களும் வன்முறை வடிவத்தை எடுத்தன. மாநில அரசாங்கத்தின் செயலாணை இப்பிரதேசங்களில் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டது. மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கொலை செய்யப்பட்டனர்.
மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை அகற்றுவதற்காக முப்பது வருடங்களு க்கு மேலாக முயற்சித்து வந்த திரினாமுல் காங்கிரஸ¤க்கு நக்ஸலைட் டுகளின் வன்முறை தேவையானதாக இருந்தது. இப்படித்தான் நக்ஸலைட்டுகள் மேற்கு வங்காளத்தில் காலூன்றினார்கள்.
முதலமைச்சர் புத்தாதேவ் பட்டாசார்ஜியைக் கண்ணி வெடி வைத்துக் கொலை செய்வதற்கு மேற்கு மெதினிபூர் மாவட்டத்தில் 2008 நவம்பர் மாதத்தில் நக்ஸலைட்டுகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இக்கொலை முயற்சி தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சிலரைக் கைது செய்தார்கள்.
பொலிஸ் அட்டூழியங்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதாகக் கூறி நக்ஸலைட்டுகள் ஆரம்பித்த இயக்கம் தீவிர வன்முறை வடிவம் எடுத்து இம்மாவட்டத்தில் அரசாங்க செயலாணை செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்தது.
நக்ஸலைட்டுகளை மாநிலத்திலிருந்து ஒழிப்பதற்கு மத்திய படையும் மாநில பொலிஸாரும் இணைந்து செயற்படுகின்றன. எனினும் நக்ஸலைட்டுகள் தங்கள் வன்முறைச் செயற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்கின்றார்கள்.
மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தினமும் கொலை செய்யப்படுகின்றார்கள். வர்க்க எதிரிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று நக்ஸலைட் இயக்கத்தின் மூலகர்த்தாவான சாருமஸூம்தார் கூறினார்.
இன்று அந்த இயக்கம் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையே திட்டமிட்டு அழிக்கின்றது. வர்க்க எதிரிகளாக மாக்சிஸ்டுகளைக் கருதுகின்றார்கள்.
மேற்கு வங்காளத்தில் நக்ஸலைட்டுகள் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதற்கு மத்திய அரசாங்கத்தின் எமது அணுகுமுறை (Soft approach) காரணமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில்
சாருமஸூம்தார்
எழுகின்றது. மத்திய அரசாங்கத்தின் பங்காளியான திரினாமுல் காங்கிரஸ் இப்போதும் நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றது.
மாநில சட்ட சபையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள பர்தா சட்டர்ஜி, கப்பல் போக்குவரத்து மத்திய இணை அமைச்சர் முகுல் றோய், கிராமிய அபிவிருத்தி மத்திய இணை அமைச்சர் சிசிர் அதிகாரி ஆகியோர் உள்ளடங்கிய திரினாமுல் காங்கிரஸ் குழுவொன்று யூலை 28ந் திகதி மேற்கு மெதினிபூர் மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டது.
அங்கு அவர்கள் நடத்திய கூட்டங்களில் மேற்கு வங்காளத்திலிருந்து மத்திய படையினரை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள்.
நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையைப் பலவீனப்படுத்தும் கோரிக்கை இது.
திரினாமுல் காங்கிரஸ் தலைவியும் மத்திய கபினற் அமைச்சருமான மமதா பானர்ஜியோ அல்லது அவரது கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்களோ நக்ஸலைட்டுகளின் தீவிரவாத செயற்பாடுகளுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.
நக்ஸலைட்டுகளுடனான உறவை இன்று வரை திரினாமுல் காங்கிரஸ் பேணி வருகின்றது. நக்ஸலைட்டுகளின் கட்சியைத் தடை செய்திருக்கும் மத்திய அரசாங்கம் திரினாமுல் காங்கிரஸ¤க்கும் நக்ஸலைட்டுகளுக்கும் இடையிலான உறவைக் கண்டுகொள்ளாதது போலவே இருக்கின்றது.
1977 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்யும் மாக்ஸிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற அரசியல் அபி லாஷை திரினாமுல் காங்கிரஸ¤க்கு மாத்திரமன்றிக் காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கவே செய்யும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment