சிறுவன் நடத்திய விநோத கொள்ளை
ருமேனியா நாட்டில் ஜிர்லா என்னுமிடத்தில் உள்ள சிறுவர்கள் படிக்கும் நர்சரி பள்ளிக்கூடத்தில் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த அறைகளில் உள்ள பொருட்கள் யாவும் சிதறிக்கிடந்தன. மறுநாள் அந்த நர்சரிக்கு வந்த ஆசிரியர்கள் உடனே போ லிஸாருக்கு தமது பாடசாலையில் கொள்ளை நடந்திருப்பதாக தகவல் தந்தனர் இச் சம்பவத்தை புலன் விசாரணை செய்து வந்த போலீசார், இந்த கொள்ளைக்கு மூலகர்த்தா யார் என்பதை கண்டுபிடித்த போது, அசந்துவிட்டனராம்.
அதே நர்சரி பள்ளியில் படித்து வரும் 5 வயது சிறுவன்தான் கொள்ளை கும்பல் தலைவன் என்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நர்சரிக்கு பக்கத்தில் வசித்து வரும் 5 வயது மற்றும் 13 வயதான சிறுவர்களை விசாரித்த போது, 5 வயது பையன் இந்த ஐடியாவை சொல்லிக்கொடுத்து திருடி யிருப்பது தெரிய வந்தது.
அவர்கள் கொள்ளையடித்த பொருட்கள் என்ன தெரியுமா? இரண்டு பைகள் நிறைந்த பொம்மைகளைத்தான்.
0 விமர்சனங்கள்:
Post a Comment