பைக் ஓட்டும் மூன்று வயது பாலகன்
பைக் உயரம் கூட இல்லாத 3 வயது சிறுவன் ஒருவன் அநாயசமாக மிகப்பெரிய ரோயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளான்.
மோட்டார் சைக்கிளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து சிறப்பாக ஓட்டியதால் அவனுக்கு சிறப்பு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆசிம் கான் என்னும் அந்த சிறுவனுக்கு இந்த மாதம் தான் 4 வயது பிறக்கிறது. அவனது தந்தை சாந்தனுவின் பைக்கில் செல்லும் போது, அதனை எப்படி ஓட்டுவது என்பதை கற்று கொண்டு இந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறான்.
அவனுக்கு எட்டுகின்றவகையில் சில மாற்றங்களை பைக்கில் அவனது தந்தை செய்து கொடுத்துள்ளார். எனினும் ஜனநெருக்கடி மிகுந்த சாலைகளில் அவனை தனியே பயணிக்க சாந்தனு மறுத்து விடுகிறார்.
என் மகன் நன்றாக ஓட்டுவான் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் சாலையில் வரும் மற்ற டிரைவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்கிறாராம் இந்த அதிசய மகனை பெற்ற தந்தை.
0 விமர்சனங்கள்:
Post a Comment