ஆறு வயதில் அதிகாரியானார்
இங்கிலாந்தில் 6 வயது சிறுவன் ஒருவனுக்கு அருங்காட்சியக அதிகாரியாக வேலை கிடைத்துள்ளது.
சாம் பின்டன் என்னும் அந்த சிறுவன், யார்க் நகரில் உள்ள ரெயில்வே அருங்காட்சியகத்திற்கு வேலைகேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளான். எனக்கு 6 வயதுதான் என்றாலும், தன்னால் அருங்காட்சியகத்தில் வேலை பார்க்க முடியும் என்று நம்பிக்கையே யோடு எழுதியிருந்தானாம். தன்னிடம் பல்வேறு ரெயில் பொம்மைகள் இருப்பதாகவும், பலமுறை அருங்காட்சியகத்திற்கு வந்துபோய் இருப்பதாகவும் அவன் கூறியிருந்தானாம். இந்த கடிதத்தை பார்த்து வியந்து போன அருங்காட்சி யகத்தின் இயக்குனர் சிறுவனுக் காகவே ஒரு பதவியை உருவாக்கி அதில் அவனை நியமித்து விட்டனராம்.

0 விமர்சனங்கள்:
Post a Comment