தமிழரசுக் கட்சியின் முந் திய நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துவிட்டதா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று முன் தினம் பாராளுமன்றத்தில் ஆற் றிய உரையில் குறிப்பிட்ட இரண்டு விட யங்கள் எங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. வடக்கு, கிழக்கு பகுதிகளில் எவ்விதக் காரணம் கொண்டும் இராணுவத்துக்கோ பொலிஸ¤க்கோ ஆட்திரட்டல்கள் இடம் பெறக் கூடாது எனவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தனது கட்சிக்குப் பாதுகாப்பு வழங்க வேண் டும் என்றும் அவர் தனது உரையில் கூறி யுள்ளார்.
இரா. சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினர். இப்போது உயி ருடனுள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களில் சிரேஷ்டர் என்று இவரைக் கூறலாம்.
தமி ழரசுக் கட்சி நீண்ட காலமாகக் கூறிவந்த குற்றச்சாட்டுகளுள் இராணுவத்துக்கும் பொலிஸ் சேவைக்கும் போதுமான எண் ணிக்கையில் தமிழர்கள் சேர்த்துக்கொள்ளப் படுவதில்லை என்பதும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்ப டுவதில்லை என்பதும் அடங்குகின்றன.
இக் குற்றச்சாட்டுகளுக்கும் பாராளுமன்ற உறுப் பினர் சம்பந்தன் தெரிவித்த மேற்படி கரு த்துகளுக்குமிடையே பாரிய முரண்பாடு காணப்படுகின்றது. தமிழரசுக் கட்சியின் முந் திய நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துவிட்டதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ் பவர்களைப் பொலிஸ் சேவையில் இணைத் துக்கொள்வதன் மூலம் அவ்விரு மாகாணங் களிலும் பொலிஸ் நிலையங்களில் முறைப் பாடுகளைத் தமிழில் பதிவு செய்வதற்கான வசதி ஏற்படும்.
இராணுவ சேவையில் தமிழர் கள் இணைவது பாதுகாப்புப் படையில் சமபலமின்மையைத் தவிர்க்கும். இவை தேவை யற்றவை என்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு கருதுவது போல் தெரிகின்றது.
பாதுகாப்பு பற்றித் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு பேசுவது வேடிக்கையாக இரு க்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்க ளில் சில அரசியல் கட்சிகள் கடந்த கால ங்களில் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள் ளப்பட்டிருந்ததற்குத் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பினர் பிரதான பொறுப்பாளிகள்.
தேர்தலில் இவர்களுக்கு எதிராகப் போட் டியிட்ட வேட்பாளர்கள் வீதியில் இற ங்கிப் பிரசாரம் செய்ய முடியாத அளவுக் குப் புலிகள் அட்டகாசம் செய்ததற்குப் பின்னாலிருந்து செயற்பட்டவர்கள் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.
இன்று நிலைமை மாறிவிட்டது. அர சியல் கட்சிகளின் பாதுகாப்புக்கு அச்சுறு த்தலாகச் செயற்பட்ட புலிகள் இப்போது அரங்கில் இல்லை. எல்லோருக்கும் பாது காப்பு வழங்கப்படுகின்றது.
பாதுகாப் பான சூழல் இருப்பதாலேயே யாழ்ப் பாணம் மாநகர சபைத் தேர்தலிலும் வவுனியா நகர சபைத் தேர்தலிலும் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு சுதந்திரமாகப் பிரசாரம் செய்ய முடிந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து மாத்திரமன்றி, எல்லா அரசியல் கட்சிக ளிடமிருந்தும் தமிழ் மக்கள் இன்று எதிர் பார்ப்பது அரசியல் தீர்வு முயற்சியை முன்னெடுப்பதையே.
இந்த முயற்சியிலி ருந்து விலகி நிற்பதற்கான நொண்டிச் சாட்டுகள் கூறுவதை மக்கள் இலகுவில் புரிந்துகொண்டு அத்தகையோரை நிராக ரித்துவிடுவார்கள்.
ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் செயற் படவில்லை.
இன்று வரை அரசியல் தீர்வு திட்டமொன்று இக்கட்சியிடம் இல்லை. நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்ட மொன்றை முன்வைத்து அதை அடைவதற்கு ஆக்கபூர்வமான வழியில் செயற்படுவதன் மூலமே தமிழ் மக்களின் நலனை உறுதிப் படுத்த முடியும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment