தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் தடவையாக தேசிய கீதத்திற்கு மதிப்பளித்துள்ளது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி முதல் தடவையாக தேசிய கீதம் ஒலிக்கும் போது அதற்கு கௌரவமளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நடாத்தப்படும் நிகழ்வுகளில் தேசிய கீதம் ஒலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், முதல் தடவையாக வவுனியா உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வுகளின் போது தேசிய கீதம் ஒலித்ததாகவும், கட்சி உறுப்பினர்கள் அதற்கு மதிப்பளிக்கும் வகையில் எழுந்து நின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசியப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினைத் தேட ஈ.பி.டி.பி மற்றும் புளொட் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment