புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரை யாழ் அழைத்துவர அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் அவரது சகோதரி கோரிக்கை!
புலிகள் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி என்பவரை யாழ் குடாநாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தயா மாஸ்டரின் சகோதரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் அமைச்சின் யாழ் பணிமனைக்கு வருகைதந்திருந்த தயா மாஸ்டரின் சகோதரியான பருத்தித்துறை தம்பசிட்டி வீதியில் வசிக்கும் வேலாயுதம் சியாமளாதேவி தயா மாஸ்டரின் தாயாரான 77 வயதுடைய வேலாயுதம் சிவபாக்கியம் அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு எழுதிய கடிதத்தை கையளித்தார்.
அக்கடிதத்தில் தனது மகனான 54 வயதுடைய வேலாயுதம் தயாநிதி மிகவும் நோய் வாய்ப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக கடிதம் எழுதியுள்ளதாகவும் அவரை யாரும் சென்று பார்க்கவில்லை எனவும் எனவே தனது மகனை யாழ் குடாநாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளார்.
தயா மாஸ்டர் புலிகளின் பிடியில் இருந்த வன்னிப் பிரதேசத்தை மீட்ட சமயம் முல்லைத்தீவில் படையினரிடம் சரணடைந்தார். அத்துடன் பிரபாகரன் சடலத்தை முள்ளி வாய்க்கால் கடற்பகுதியில் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment