கொழும்புக்கு தொழிலுக்காக வந்த இரண்டு மலையக யுவதிகளை காணவில்லை!
கொழும்புக்கு தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட இரண்டு மலையக யுவதிகளை காணவில்லை என அவர்களது பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர் மலையகத்தின் சாமிமலை மானெலுவ பகுதிகளைச் சேர்ந்த 19 வயதுடைய முனியாண்டி மோகனா மற்றும் 22வயதுடைய சக்திவேல் சங்கீதா ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
கொழும்பில் வேலைக்கு அமர்த்துவதாக கூறி நோர்வுட் பொலிஸ் நிலையத்தின் அதிகாரி ஒருவர் அவர்கள் இருவரையும் கடந்த 7மாதங்களுக்கு முன்னர் அழைத்து வந்துள்ளார்.. எனினும் அவர்கள் கடந்த ஏழுமாதகாலமாக பணம் எதனையும் அனுப்பாத நிலையில் கொழும்பில் இருந்து இரண்டு யுவதிகளையும் அழைத்து செல்வதற்கு பெற்றோர் முயற்சித்துள்ளனர்.
எனினும் சில நாட்கள் கடந்த பின்னர் அவர்களை அனுப்புவதாக தொழில் வழங்குனர்கள் தெரிவித்த போதும் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என அவர்களின் பெற்றோர்கள் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் இதே பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமியர்கள் கொழும்பில் வைத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமையை அடுத்து தாம் பாரிய அச்சத்துக்கு உள்ளாகியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment