வாகனம் வித்துக்குள்ளானதில் அமைச்சர் முரளிதரனுக்கு காயம்
வீரகேசரி இணையம்
தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விபத்தில் சிக்கி காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றதன் பின்னர் வீடு திரும்பியுள்ளார். எனினும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரும் அவரது வாகன சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியாவில் இன்று இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் முரளிதரன் அங்கிருந்து ஹெலிக்கெப்டரில் கொழும்பிற்கு வருகைதந்துள்ளார்.
ஹெலிகெப்டர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மைதானத்தில் தரையிறங்கியது அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் அமைச்சர் வீட்டிற்கு சென்ற வேளையிலேயே இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அமைச்சரின் வாகனத்தின் மீது எதிரே வந்த பஸ் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அமைச்சருக்கு கால்களிலும் தலையிலும் சிறு காயங்கள் ஏற்பட்டதுடன் மெய்பாதுகாவலர் மற்றும் சாரதிக்கு கடும் காயம் ஏற்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment