ஜீ.ரீ.வி (GTV) பற்றிக் கவனமாக இருங்கள்
திருப்பப்பட்டு தொலைக்காட்சிகள் பணபிசாசுகளின்
தொல்லைக்காட்சியாக மாறியதால் “இன்று இருண்டு
போன எமது தமிழ்சமூகம்“!!!
08-09-2009:
நாம் தமிழை தாயாக எண்ணுபவர்கள் ஆதரிக்கின்றவர்கள் அதனால் என்றும் அபாண்டமான பொய்களை எழுதி மக்களை திசைதிருப்ப வேண்டும் என்ற எண்ணம் எமக்கு இல்லை. நாம் பணத்துக்கு சோரம்போகின்றவர்களும் அல்ல என்பது பலர் அறிந்த உண்மை!!! இதனால் இதில் இருப்பது உண்மையா? பொய்யா?? என்று குறிப்பிட்ட தொலைக்காட்சி நிருவனத்துக்கு தொலை தொடர் மூலம் தொல்லை கொடுத்தால் இன்னும் அறியமுடியும். –“எம்குரல்“-
புலம் பெயர் தமிழர்கள் தமிழ் தேசியத்தின் பெயரில் அதி உச்ச பற்றுக்கொண்டு செயற்படும் இந்தக் காலகட்டத்தில், அந்த மக்களின் உணார்வுகளைப் பணமாக அறுவடைசெய்யும் நோக்கத்தில் தமிழ் தேசிய வியாபாரிகள் வெறிகொண்டு அலைவதென்பது ஒன்றும் புதிதான விடயமல்ல!!
தமிழ் தேசிய வியாபாரிகள் பலரை புலம்பெயர்ந்த மக்கள் தமது நாளாந்த வாழ்வில் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள!
தமிழ் தேசியம் என்று கூறிக்கொண்டு எதைச் செய்தாலும், நல்ல பண அறுவடை செய்யலாம் என்பதை கணக்கிட்டுக்கொண்டு, எங்கெங்கெல்லாம் சாத்தியம் இருக்கின்றதோ அங்கெல்லாம் தமது கைவரிசையைக் காண்பித்துவிடுவதில் இந்தவகை வியாபாரிகள் கைதோர்தவர்களாகவே இருக்கின்றார்கள்!!
ஜீ.ரீ.வி. என்ற பெயரில் ஜரோப்பாவில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும��� தொலைக்காட்சி யின் நிர்வாகம் இதற்கு ஒரு தலைசிறந்த உதாரணம்!!!
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த என்ற வியாபாரிக்கும், ஊடகத்திற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. 2006 ஆம் ஆண்டில் ரீ.ரீ.என் என்ற உலகத் தமிழர்களின் தேசிய ஊடகம் தடை செய்யப்பட்ட காலகட்டத்தில் அந்த ஊடகத்திற்கு இருந்து சந்தாதாரர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, பெருமளவிலான இந்த சந்தாதாரர்களை வைத்துக் கொண்டு கொழுத்த பண வேட்டை நடாத்தலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டு, பணப்பிசாசு என்ற இந்த வியாபாரி, ஊடக வியாபாரத்தில் குதித்தார். அதாவது மக்களின் சொத்தை, அதுவும் தமிர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் வழியிலேயே இத்தகைய போக்கிரிவியாபாரிகள் தேவையா? பிரபாகரனின் பெயரைவைத்து மக்களை சூறையாடிய இந்த விபச்சார வியாபாரி யார் தெரியுமா? செல்வேந்திரன் சிவநாயகம் என்ற பணப்பிசாசு என்று தெரியவந்துள்ளது.
மக்களின் கண்ணாக இருக்கும் ஊடகசுதந்திரத்தில் ஒரு கலப்படமா? இன்று மக்கள் திட்டத்தில் கைவைத்த பிசாசுகளை தெருவுக்கு கொண்டுவந்தால் தான் நாளைய தமிழ் சமூகம் நிம்மதியாக வாழமுடியும். என்று, இன்று மக்கள் கங்கனம் கட்டத்தொடங்கியதால் மக்கள் சேவையில் 1990ம் ஆண்டு தொடக்கம் ஈடுபட்ட எமது நிர்வாகத்திற்கு பல உண்மைகள் தொடர்ந்து வருகின்றது. இதில் இதுவும் ஒன்று இதனால் அந்த வியாபாரி செல்வேந்திரன்
சிவநாயகம் என்று சுட்டிக்காட்ட வேண்டியகட்டாயத்திற்குள் உள்ளோம்.
கடந்த காலத்தில் ரீ.ரீ.என். ஊடகத்தின் தொழில்நுட்ப சாதனங்கள் அனைத்தையும் தன்வசப் படுத்திக் கொண்டு, ரீ.ரீ.என் தனது சொத்துக்களையெல்லாம் சுருட்டிக்கொண்டு, ரீ.ரீ.என் நேயர்களின் சந்தாக்களைக் குறிவைத்து தனது வியாபாரத்தை ஆரம்பித்தார். 4ம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பித்திருந்த காலப்பகுதியில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விடுதலைப் புலிகளுக்கும் புலம்பெயர் நாடுகளில் அவசரமாக ஒரு தேசிய ஊடகம் தேவைப் பட்டது. அதற்கு தரிசனம் என்ற பெயரில் செல்வேந்திரன் ஆரம்பித்த ஊடகம் அதில் புலிகளும் இணைந்து கொண்டார்களேயன்றி அந்த ஊடகம் புலிகளின் ஊடகமல்ல. தமிழ் தேசியத்தை நேசித்த ஊடகவியலாளர்களையும் தரிசனத்தில் இணைந்து பணியாற்றும்படி வேண்டுகாள் விடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தரிசனம் தொலைக்காட்சி வெற்றி நடைபோட ஆரம்பித்த சில நாட்களிலேயே, பணத்தை குறிவைத்து தொடங்கிய இந்த ஊடக பிசாசு (செல்வேந்திரன்) புலிகளை ஓரம்கட்ட ஆரம்பித்தார். அவருடைய குறிக்கோள் முற்றுமுழுதாகவே பண அறுவடையே என்பது புலனான ஒருவிடையம்.
புலிகளின் பெயரைச்சொல்லி புலிகளையும் அருகில் வைத்துக்கொண்டு எப்படி கொள்ளை அடிப்பது? இதனால் தான் புலிகள் தரிசனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. ஊடகம் என்பது மக்களுக்காக இயங்கும் ஒரு ஐனறஞ்சித தகவல் நிலையமாக இருக்கவேண்டும். இதனால் தான் புலிகளின் பிழைகளை எழுதிய „ஈரனல்“ பல ஊடகங்கள் புலிகள் பெயரை வைத்து நம்;பிக்கை துரோகம் செய்ததை மக்களுக்கு தெரிவிக்க முன்வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலிச்சாயம் பூசினால்தான் ஐரோப்பாவில் வியாபாரம் செய்யமுடியும் என்பதால் தேசியம் பேசிபடி பெருத்தபண அறுவடை செய்கின்றார்கள் இந்தமோசடிகாரர்கள். விடுதலைப் புலிகளும் போராட்டத்தில் அதிககரிசனை செலுத்திவந்ததால், இவரது வியாபாரத்தைத் தட்டிக் கேட்கும் பணிக்கு அவர்கள் நேரத்தை செலவிடவில்லை. தரிசனம் என்ற பெயரில் செல்வேந்திரன் தொடங்கிய தேசிய ஊடக வியாபாரம், தென்றல், என்று மாறி தற்பொழுது ஜீ.டி.வி. என்ற வடிவத்தில் வந்துநிற்கின்றது என்பது தான் கடந்த காலத்தில் அடித்த கொள்ளையின் பிரதிபலிப்பு.
தேசியம் பேசும் ஒரேஊடகம் என்ற காரணத்தினால் பிரித்தானியாவிலும், சுவிட்சலாந்திலும், அவுஸ்திரேலியாவிலும் பல தொழிலதிபர்கள் பலஇலட்சத்தை செல்வேந்திரனுக்கு நன்கொடை யாகக் கொடுத்திருந்தார்கள். பல வியாபார நிறுவனங்கள் இந்த தொலைக் காட்சிக்கு பல வழிகளிலும் பொருளாதார உதவிகள் புரிந்து வந்தன.
தமிழ் தேசியத்தில் வெறிகொண்ட பலர், தமது கையால் ஆகாத செயலுக்கு தமிழ் ஆர்வளர்களாக தொழில்நுட்பக் கலைஞர்களை ஊதியம் எதுவும் இல்லாமல் அவர்களுக்கு தேசியம் பேசியே துன்புறுத்தியே வருகின்றார்கள் என்பதும் ஒரு கசப்பான விடையம்.
இன்று இந்த தொல்லைக்காட்சி நிருவனங்களுக்கு தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வந்தார்கள் பலர். ஆனால் தேசியத்தின் பெயரில் விதைக்கப்பட்ட இத்தனை விதை களையும் கவனமாக வளர்த்து பணமாக அறுவடைசெய்யும் நயவஞ்சக வித்தையை செல்வின் என்று அழைக்கப்படும் செல்வேந்திரன் சிவநாயகம் கற்றுவைத்திருக்கின்னார் என்றால் அது தமிழ்மக்களின் கவணத்திற்கு எடுத்துச் செல்லவேண்டிய விடையமாகவே உள்ளது.
இன்றுவரைக்கும் இந்த நயவஞ்சக வித்தைகளை வியாபாரமாக்கி ஈழத்தமிழர்களையும், தேசியத்தையும், தேசியத்திற்காக தம்மை அர்பணித்த போராளிகளின் ஆண்மாக்களையும் வெற்றிகரமாக ஏமாற்றி வருகின்றார்கள் என்றால் எப்படி இத்தகைய பிசாசுகளை எமது வீட்டின் உள் வரவழைப்பது ஆதரிப்பது என்று நாம் தான் சிந்திக்கவேண்டும் மக்களே!
வல்வெட்டி பிரபாகரன் கொள்ளைக்காரன் கொலைகாரன் என்று கூறும் ஊடகங்களும் தூற்றும்மக்களும் ஒன்றைமட்டும் நன்கு சிந்திக்கவேண்டும்!!! பயங்கரவாதத்தை துரத்தினோம் என்று மார்பு தட்டும் இன்றைய இராணுவத்தின் சப்பாத்து வன்னியில் கடந்த முப்பது வருடமாக பதிக்கவில்லை. என்ற பெருமை என்றும் அந்த பிரபாவையும் எமது மண்ணில் எமக்காக இறந்த ஐPவன்களையும் சாருமேயன்றி இந்த சொறிபிடித்தவர்களை சாராது. இத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் பணத்திற்காகவே தமது குடும்பத்தினரையும் கூறுபோடுவார்கள் என்பதால் நாம் தான் எம்மை காப்பாற்றவேண்டும் என்று சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இனியாவது நீங்கள் இந்த உண்மைகளெல்லாம் தெரிந்து நல்ல பாதையில் நடக்கவேண்டும் என்றே பல தேடல்களை தொடர்ந்து எழுதுகின்றோம்.
இந்த பணபிசாசு என்ற செல்வேந்திரனின் தேசிய வியாபாரி என்பது ஒரு ஆபத்தான கட்டத்தில் உள்ளது. இன்று புலம் பெயர் தமிழர்களை அவர் இழுத்துச்செல்கின்றார். இந்த உண்மைகளை நாம் வெளிப்பட்டுத்தும் நிற்பந்தத்தில் உள்ளோம். செல்வேந்திரன் பற்றி புலம்பெயர் தமிழர்களுக்கு நாம் எச்சரிப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். இன்று இவரைப்பற்றி மட்டுமல்லு பலரின் பணமோசடிகள் பகிரங்கமாகவே வெளிக்கொண்டுவரும் „ஈரனல்“ மேலும் பலர் செய்த பணமோசடிகளை தமிழ்சமூகத்திற்கு முன்கொண்டுவர தயாராகிக் கொண்டு உள்ளது. இது தனிப்பட்ட முயற்சிகள் அல்ல. கல்லுமேடுகளில் வரண்ட நிலங்களில் வளர்ந்த தமிழ் பிரியர்களால் முன்னெடுக்கும் பாதை என்பதை நாம் மீண்டும் தமிழ்சமூகத்திற்கு முன்வைக்க விரும்புகின்றோம்
இன்று தமிழர்களின் தேசியவிடுதலைப் போராட்டம் பலத்த பின்னடைவைச் சந்தித்து விட்டுள்ள தான மாயை உருவாகியுள்ள இந்த நேரத்தில், தனது வியாபார நுனுக்கங்களை மாற்றி அமைத்து எமது பொது எதிரிக்குத் துணைபோகும் வியாபாரத்தை மேற்கொள்ள பலர் கிளம்பியுள்ளார்கள்.
குறிப்பாக புலம்பெயர் தமிழர்களை „இந்தியாவை மாத்திரமே நம்பியிருக்கும் ஒரு மனநிலைக்கு“ கொண்டு,; செல்லும் பணியை ஜீ.டி.வி. ஊடாகம் செய்வதற்கு செல்வேந்திரன் பொறுப் பெடுத்துள்ளதாக சந்தேகிக்கப் படுகின்றது. „தமிழர்களுக்கு எதுநன்மை என்று தீர்மாணிக்கும் சக்தியாக எமது தொலைக்காட்சி மாறவேண்டும்’ என்ற தனது நிலைப்பாட்டை ஜீ.ரீ.வியின் பணியாளர்களுக்கு செல்வேந்திரன் வெளிப்படுத்தியுள்ளார். „இந்தியாவை நம்புவதைத் தவிர வேறு வழிகள் எதுவும் எமக்குக் கிடையாது’ என்கின்ற தனது கருத்தை ஜீ.ரீ.வி. (தமிழ் தேசிய) நேயர்களுக்குத் திணிக்கும்படியான உத்தரவை தனது செய்தி மற்றும் நடப்புவிவகாரப் பிரிவினருக்கு வழங்கியுள்ளார்.
செல்வேந்திரனின் இந்த புதிய நிலைப்பாடு, ஊடகவியலாளர்களுக்குப் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு எதிரான செய்திகளை, வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்கவேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவை ஜீ.ரீ.வி. இன் செய்திப் பிரிவிக்கு செல்வேந்திரன் வழங்கினார். இந்த உத்தரவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜி.ரீ.வியின் பிரதம செய்தியாசிரியராக இருந்த மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம் பதவி விலகியுள்ளார். உண்மையின் தரிசனம் என்ற நிகழ்சியைத் தயாரித்து வழங்கிவந்த ஆய்வாளர் நிராஜ்டேவிட்டும் இந்தியாவின் துரோகங்களை தொடர்ந்து தனது நிகழ்சிகளில் ஒளிபரப்பியதால் வெளியேறும்படி நிர்பந்திக்கப் பட்டார். செல்வேந்திரனின் இந்தநிலைப்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜ.ரீ.வியின் நிகழ்சித் தயாரிப்பார் சுந்தர், தனது அடையாள அட்டையை தூக்கி நிர்வாகத்தின் முகத்தில் எறிந்துவிட்டு வெளியேறிவிட்டார்.
செய்திவாசிப்பாரரான நிரூஷா, ரேனுகா போன்றவர்களும் இதேகாரணத்திற்காகவே தொலைக் காட்சியை விட்டு தொல்லை விட்டுது என்றும் வெளியேறியுள்ளார்கள். படலைக்குப்படலை சுதன்ராஜ், வியாக்கியானம் நிகழ்சியின் தயாரிப்பாளர் இளயதம்பி தயாணந்தா, உட்பட தலை சிறந்த பல ஊடகவியலாளர்கள் வெளியில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக செல்வேந்திரனால் வெளியேற்றப்பட்டார்கள். (இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், ஐரோப்பாவில் தொடர்ந்து இருக்கும் இந்த ஊடகவியலாளர்களிடம் விசாரித்து உண்மையை அறிந்துகொள்ளலாம்)
ஜீ.ரீ.வியைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களில் அனேகமானவர்கள் தமிழ் ஆர்வம் காரணமாக இலவசமாகப் பணியாற்றியவர்கள். பலருக்கு கொடுக்கப்படவேண்டிய பல மாதக் கொடுப்பணவுகளை கொடுக்காமல் ஏமாற்றியே வெளியேற்றப்பட்டார்கள். தற்பொழுது எஞ்சியிருக்கும் ஊடகவியலாளர்களுக்கு செல்வின் அவர்களின் இந்த வியாபார சதி தெரிந்திருந்தும் கூட, எப்படியாவது சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமது மக்களுக்கான தமது தேசியக் கடமைகளைச் செய்துவிடவேண்டும் என்ற வாஞ்சையின் காரணமாகவே அவர்கள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு நின்றுபிடிக்கின்றார்கள்.
உண்மையிலேயே புலம்பெயர் தமிழர்களின் பலவீனம் இதுதான். தேசியம் என்ற பெயரில் யார் வந்தாலும் கண்களை மூடிக்கொண்டு அவர்களைத் தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடும் ஒரு போக்கு எம்மத்தியில் காணப்படுகின்றது. தேசியம் என்று பேசிக்கொண்டு படையெடுக்கும் வியாபாரிகள் விடயத்தில் நாம் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்கு, அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த தேசிய வியாபாரி செல்வேந்திரன் ஒரு உதாரணம். இந்தக் கடிதத்தை நாங்கள் எழுதுவதற்குக் காரணம்,
1. ஜீ.ரீ.வி தேசியம் பேசினாலும் அது ஒரு தேசிய ஊடகம் அல்ல
2. ஜீ.டி.வி.யின் உண்மையான முகாமை யார் என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள
3. ஜ.Pடி.வி. கூறும் விடயங்கள் பற்றிக் கவனமாக இருங்கள்.
4. ஜீ.டி.வி. இனது செயற்பாடுகள் தொடர்பில் விளிப்பாக இருங்கள்.
5. எங்களுக்கென்று ஒரு தொலைக்காட்சியை நாம் உருவாக்கவேண்டிய இன்றைய காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள் ஆனால் இன்று நடக்கும் போக்கிரித்தனமாக போலிகளை நம்பி மோசம் போகாதீர்கள்! வருங்கள்!! சிந்திப்போம்!!!
eeraanal website
0 விமர்சனங்கள்:
Post a Comment