மதவாச்சியில் இராணுவம் இன்று தொடக்கம் சோதனை சாவடிகளை திறந்துவிட்டது!!!
நாட்டின் தலைநகராகிய கொழும்பில் இருந்து வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கும், யாழ். மாவட்டத்திற்கும் பொருட்களை ஏற்றிச்செல்லும் லொறிகள் மதவாச்சியில் சோதனை இடப்படு வது நிறுத்தப்பட்டிருப்பதனால், லொறிகள் பொருட்களுடன் தங்குதடையின்றி தமது பிரயாணத் தை மேற்கொள்ளக் கூடியதாக இருப்பதாக லொறிச்சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
தடைகளின்றி பொருட்கள் கொழும்பில் இருந்து மதவாச்சி ஊடாக வருவதனால், வர்த்தக நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். தம்புள்ளையில் இருந்து மரக்கறி வகைகள் நேரத்திற்கே வவுனியா, மன்னார் சந்தைகளை வந்தடைவதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதிக அளவில் மரக்கறிகள் இப்போது வரத்தொடங்க ியிருப்பதாகவும் மன்னார் இருந்து மாத்திரமே வவுனியா மீன்சந்தைக்கு மீன்கள் கொண்டு வரப்பட்டதாகக்கூறும் மீன்வியாபாரிகள் தற்போது நீர்கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் இருந்தும் மீன்வகைகள் வவுனியா சந்தைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அவர்கள் கூறினார்கள். இருப்பினும், வவுனியா,மன்னார் மாவட்டங்களில் இருந்து பொருட்களையும், இப்பிரதேசங்களின் உற்பத்திப் பொருட்களையும் ஏற்றிச் செல்கின்ற லொறிகள் மதவாச்சி சோதனைச் சாவடியில் இறக்கி சோதனையிட ஏற்றப்படுவதனால் ஏற்படுகின்ற காலதாமதத்தில் எந்த மாற்றம் ஏற்படவில்லை என தெரிவிக்கப் படுகின்றது.
இதேபோன்று மதவாச்சி சோதனைச் சாவடி ஊடாக பயணிகள் வாகனங்களிலோ அல்லது பஸ் வண்டிகளிலோ நேரடியாகப் பிரயாணம் செய்வதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறித்து பஸ் பயணிகளும் பஸ் உரிமையாளர்கள் சாரதிகளும் கவலை வெளியிட்டுள்ளார்கள். இன்று மதவாச்சி சோதனைச்சாவடியில் சோதனைக் கெடுபிடிகள் குறைவடைந்துள்ளமையினால் இந்தவீதியின் ஊடான போக்குவரத்து அதிகரித்து உள்ளது என்றும் தெரியவருகின்றது
0 விமர்சனங்கள்:
Post a Comment