அவுஸ்திரேலியா ‘உலகத்தமிழர்’ மத்தியில் நடைபெறும் குத்து வெட்டும் ஏகப்பிரதிநித்துவப் பதவிப்போராட்டமும்
(இது அவுஸ்திரேலியாவிற்கு மட்டும் பொருந்தும் விடயம் அல்ல. உலகில் எங்கெல்லாம் புலிப்பினாமி அமைப்புக்கள் உள்ளனவோ அங்கெல்லாம் உள்ள பொதுவான பிரச்சனை. பிரச்சனையை வெளிக் கொணர முயலும் ரமணாவும் ஏகபோகத்தை விழுங்கிய மகாபிரபுதான் என்பதை அவரின் கடிதம் எடுத்தியம்பி நிற்கின்றது. ஏகபோகம், ஜனநாயக மறுப்பு, மாற்றுக் கருத்தாளர்களை துரோகிகளாகப் பார்த்து அவர்களை கொல்லுதல் போன்றவைதான் புலிகளின் அழிவிற்கு முக்கிய காரணம். இன்னும் நிறையச் சொல்லலாம்…. மிகுதியை கடிதப் பரிமாற்றங்களில் காணவும். இக்கடிதம் ஓர் அறிவழகன்(ராகவன்?) ரமணா என்ற இருவருக்கிடையில் நடைபெற்ற நிகழ்வு. இனிக்கடிதத்தை பார்ப்போம். அ… மறந்து போட்டன் ரமணா ராகவன் அண்ணாவிற்கு அவரின் உயிர் மூச்சில் (அதுதான் எமது தாய்மொழி) கடிதம் எழுதக் கற்றுக் கொடுங்களேன் முதலில்…)
கடிதங்கள்:
வணக்கம் ராகவன் அண்ணா.
என்னைப்பற்றிய அறிமுகம் உங்களுக்கு தேவையில்லை என நினைக்கிறேன். ஏனெனில் அறிமுகம் செய்யும் அளவுக்கு நான் உங்களைப்போல சமுதாயப்பணி எம் மக்களுக்காக செய்துவிடவில்லை என்பது உண்மை.ஆனால் தமிழ் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட அனுபவங்களின் ஊடாக வலிகளை உணர்ந்த தமிழ்ப்பொடியளில் நானும் ஒருவன்.
பத்து வயதில் பிறந்து வளந்த மண்ணை விட்டு ஒடத்தொடங்கிய இந்த தமிழ்ப்பொடியன் இன்று 20 வருடங்களுக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கிறேன். நாள்தோறும் விடிந்தால் மரணஓலம் கேட்டபடி கண்விழித்த நாட்கள்தான் அதிகம். விடுதலைப்போராட்டத்துக்கு மீசை முளைக்கும் பருவத்தில் நான் அவர்களின் இடுப்பில் இருந்து வளர்ந்தவன். நினைவுகளிலும் செயல்களிலும் அதன் தாக்கம், அடையாளம் உடல் சாம்பலாகும் வரை அழியாது. இன அழிப்பு போரின் வடுக்களாகவும், ரணங்களாகவும் வாழும் அடையாளங்களில் நானும் ஒருவன். ஊர், உறவு, சுற்றம், நட்பு, சகோதரம், கல்வி... இப்படி இழந்தவை பல.
இப்போது நாம் சந்தித்திருக்கும் இழப்பு, பின்னடைவு, தோல்வி என்பன மக்களையும் மண்ணையும் விடுதலையையும் நேசிக்கும் எவனாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. மண்ணுக்குள் விதையான மாவீரர்களினதும் உறவுகளினதும் மனக்குரல் எங்களின் மனட்சாட்சிகளை தட்டி கேள்வி கேட்கின்றபோது எம்மால் பதில் சொல்ல முடியாமல் மௌனமாய் மனதுக்குள் அழுகிறோம். இதன் தாக்கம் ஆத்மார்த்தமாக விடுதலையினை நேசிக்கும் உங்களுக்கும் இருக்கிறது. எம் மக்களுக்காய், விடுதலைக்காய் ஏதாவது செய்துவிடவேண்டும் என்ற ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கிறது. அதை சிலர் மட்டும் செயல் வடிவமாக செய்ய முற்படுவார்கள்.
உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் (காதலித்தவளை கை கழுவி சீதனத்திற்காக மணம்முடித்த விபரம் தெரியுமோ தெரியாது) , உங்களின் சமுதாயப்பணி, உங்களின் விடுதலைவேட்கை இப்படி பலவற்றை முழுதாக அறிந்திராவிட்டாலும் போதுமான அளவு அறிந்திருக்கிறேன். உங்களுடன் முதன் முதல் இற்றைக்கு 6 மாதங்களுக்கு முன் பேசினேன். அப்போது நான் யார் என்றும் உங்களுக்கு தெரியாது. ஆனால் நான் வேண்டுகோள் விடுத்த ஒரு வேண்டுகோளை நீங்கள் நிறைவு செய்ததில் இருந்து, உங்களின் சுயநலமற்ற சமுதாயப்பணியை புரிந்து கொள்ள என்னால் முடிந்தது.அதன் பின்னர் உங்களின் பல்வேறான செயற்திறன் மிக்க முன்னெடுப்புகளின் முக்கியத்துவத்தினை அறிந்திருந்தேன். பார்த்துமிருக்கிறேன். அதற்கும் மேலாக நீங்கள் எங்கள் பாடசாலையின் பழைய மாணவன் என்று அறிந்தபோது பெருமைப்பட்டும் இருக்கிறேன். கன்பராவில் நிகழ்ந்த கவனயீர்ப்பு முன்னெடுப்புகளிலும் செயற்பாடுகளிலும் உங்களின் பங்களிப்பினை கண்டு பெருமையோடு பலரிடம் பேசியிருக்கிறேன். அப்போது உங்களிற்கு எதிராக சிலர் மாற்றுக்கருத்தினை கூறியபோது அவர்களோடு நேரடியாக உங்களுக்காக முரண்பட்டிருக்கிறேன்.
வேலைப்பழுவின் மத்தியிலும் நீங்கள் மெல்பேர்ணில் நிகழும் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுகின்ற போது நான் உங்களைப்பார்த்து வியந்துமிருக்கிறேன். கடந்த மே மாத நிகழ்வின் பின், பல வழிகளில் பலரும் பாதிக்கப்பட்டோம். மனதால் சோர்வடைந்திருந்தோம் என்பது உண்மை. ஒரு இடைவெளி கிடைத்தது எல்லோருக்கும் சிந்திப்பதுக்கும் கடந்த கால நிகழ்வுகளை இரைமீட்பதற்கும். அந்த இடைவெளியில் சுயமாக பலர் சிந்தித்ததன் பயனாக பல கேள்விகள் எழுந்தன. கேள்விகளுக்கு பதில்கள் தேடிய போது, பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவந்தன.
அழிவுகளையும் உறவுகளின் இழப்புக்களையும் மரண ஓலங்களையும் கேட்டபோது உணர்வின் வேகத்தில் ஏதாவது செய்து அதை நிறுத்த வேண்டும் என்ற வேகத்தில் யார் என்ன சொல்கிறார்கள், எதற்காக சொல்கிறார்கள்?, இதைச் செய்ய்லாமா? செயக்கூடாதா? என்ற கேள்விகள் கேட்காமல் சிந்திக்காமல் உறவுகளை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு வேகத்தில் மக்களோடு மக்களாக போராடினோம். ஆனாலும் சில இடங்களில், நின்று சிந்தித்த போது கடந்த கால அனுபவம் தந்த பாடங்களின் ஊடாக தவறான சில முடிவுகள் எடுக்கப்பட்டபோது தெரிந்தது. நம்மில் சிலர், எங்களை வழிநடத்தியவர்கள் என்று சொல்வதை விட அப்போது இப்படியான பொறுப்புகளில் இருந்தவர்களிடம் கேள்விகள் கேட்டபோது கிடைத்த பதில் "நாட்டில் இருந்து வந்த முடிவு", "தலைவர் சொன்னவர்".
கேக்கிறவன் கேணையனாக இருந்தால் கேப்பையிலும் பால் கசியுமாம்.
என்ன செய்வது அப்போது சொன்னால் மக்கள் புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. மனட்சாட்சியோடு சில கேள்விகளை கேட்டபோது "யதார்த்தவாதி வெகுசன விரோதியானோம்". இது கடந்த கால உண்மை. இதை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.
அந்த வேளையில் பல தமிழ் சமூக அமைப்புகள் மெல்பேர்ணிலும் சரி சிட்னியிலும் சரி கவனயீர்ப்பு முன்னெடுப்புகளினை செய்திருந்தன. அவற்றில் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் AFTA வும் சில காத்திரமான விடயங்களை முன்னெடுத்தது. இருந்தாலும் AFTA முன்னெடுத்தது என்று சொல்வதை விட அதில் இருந்த உங்களைப் போன்றவர்களின் தனித்துவமான செயற்பாடுகள் வெளித்தெரிந்தன என்று சொல்வது சரி. அதைவிட நீங்கள் இப்போது சொல்வது போல AFTA என்பது பல அமைப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமான அங்கத்துவம் கொண்ட ஒரு ஒழுங்கான கட்டமைப்பு என்று சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாத கசப்பான உண்மை.
கடந்த வெள்ளியிரவு இன்பத்தமிழ் ஒலியில் உங்களின் செவ்வியினை கேட்டு, மனம் நொந்த பலரில் நானும் ஒருவன். நான் இதுவரை காலமும் பார்த்த "ராகவன் அண்ணா" என்ற ஒரு நம்பிக்கை ஒரு கணத்தில் உங்களின் பேச்சால் சிதைக்கப்பட்டது இப்போதும் வேதனை தரும் வலி.
உண்மையில், மே மாத நிகழ்வின் பின்னர் பல அமைப்புகளின் செயற்பாடுகளும் அதன் பொறுப்பாளர்களும் நியாயமான விமர்சனதுக்கு உள்ளாக்கப்பட்டு அவர்களின் இருப்பும், ஏன் அந்த அமைப்புகளின் இருப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டது. அந்த வேளையில், ஆத்மார்த்தமாக புலம்பெயர் போராட்டங்களின் தார்ப்பரியத்தினை உணர்ந்த வகையிலும், அவுஸ்திரேலியாவை பொறுத்த வரையில் சுய புத்தியோடு சிந்திக்கவல்ல பதவி ஆசைகள் இல்லாத அடிமனதில் விடுதலை வேட்கையுள்ள ஒரு செயற்பாட்டாளன், ஒரு பொறுப்பாளர் வேண்டும் என்ற தேவை எழுந்தது. அந்த வேளையில் இற்றைக்கு 2 மாதங்களுக்கு முன்னரே நான் உட்பட சில செயற்பாட்டாளர்களின் கண்களுக்கு தெரிந்தது நீங்கள். இது ஆத்மார்த்தமான உண்மை.
இப்போது சில கேள்விகளை உங்களிடம் கேட்கிறோம்.
1. மே மாத நிகழ்வுகளின் பின்னர், அவுஸ்திரேலியாவில் ஒரு புதிய அமைப்பு உருவாக்கம் பெறவேண்டும். அது மக்களின் கருத்துக்களின் ஊடாகவும் எதுவித வெளிப்புற அழுத்தங்களும் இல்லாத அங்கத்துவ பலம்மிக்க ஜனநாயக மக்கள் அமைப்பாக இருக்கவேண்டும் என்ற கேள்வி எழுந்ததற்கான காரணம் என்ன?
2. அந்த வேளையில், இப்போது நீங்கள் கூறுவது போல AFTA என்பது 2000 க்கும் மேற்பட்ட அங்கத்துவ எண்ணிக்கை கொண்ட,பல அமைப்புக்களையும் ஒருங்கிணைத்த மக்கள் பலம் மிக்க அமைப்பாக இருக்கவில்லை என்பது உண்மை. அப்படி இருந்திருந்தால் இன்னொரு புதிய அமைப்பு உருவாக்கம் பெற வேண்டிய தேவை ஏன் வந்தது?
3. சரி நீங்கள் இப்போது கூறுவது போல, AFTA என்பது அவுஸ்திரேலிய ஈழத்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குடையின் கீழான அமைப்பு என்றால், அவுஸ்திரேலிய தமிழர் பேரவை உருவாகின்ற போது அதன் தேவை ஏற்பட்டபோது அதை நிறுத்தியிருக்கலாமே? பலம் மிக்க அமைப்பு உள்ளபோது எதற்கு இன்னொரு அமைப்பு என கேள்வி கேட்டிருக்கலாமே?- இல்லை நீங்கள் கூறுவது போல AFTA கீழ் உள்ள 2000 அங்கத்துவர்கள் கேள்விகேட்டிருக்கலாமே? இல்லை எனில் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் கேள்வி கேட்டிருக்கலாமே? ஏன் செய்யவில்லை.
4. AFTA வின் கீழ் உள்ள அமைப்புகள் என்று சொல்வதை விட அவற்றின் பொறுப்பாளர்கள் என்று வருடக்கணக்காக கதிரைகளில் உட்காந்திருக்கும் சில சுயநலவாதிகளின் ஆதரவு தாராளமாக AFTA இக்கு இருக்கிறது என்பது உண்மை. இந்த பச்சோந்திகள் தான் (ஒரு சிலர் மட்டும்) அவுஸ்திரேலிய தமிழர் பேரவை உருவாக்கம் நிகழ்கின்ற போது அதற்கு ஆதரவு என்று பொய்யான முகத்தினை காட்டிய ஆசாமிகள். இவர்களிற்கு கொள்கை என்பது இல்லை. புகழும் வெறும் சில்லறை பதவிகளும் பொறுப்புக்களும் தான் ஒரே குறி. இதை அவுஸ்திரேலிய தமிழர் பேரவை கொடுத்திருந்தால் அவர்களின் பசி அடங்கியிருக்கும். நீங்கள் சொல்வது போல இந்த அமைப்புக்கள் தான் உங்களை அவுதிரேலிய தமிழர் பிரதிநிதியாக உலகத்தமிழர் பேரவைக்கு அனுப்பி வைத்தார்கள் என்றால், அந்த அமைப்புகளை எவை என்று சொல்லமுடியுமா?
5. AFTA என்பது பொதுவாக சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு, இங்குள்ள சில மற்றைய அமைப்புகள் போல அதன் ஒரு சில செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் விமர்சனதுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அவை தெளிவுபடுத்தப்படாத நிலையில் எதன் அடிப்படையில் AFTA என்பது அவுஸ்திரேலிய தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும் அமைப்பு என்றோ இல்லை கொஞ்சம் காட்டமாக கேட்பது என்றால் அவுஸ்திரேலிய தமிழர்களின் ஏகபிரதிநிதி நீங்கள் என்றோ உலகத்தமிழர் பேரவையில் வெளிப்படுத்தினீர்கள்?
6. இந்த உலகத்தமிழர் பேரவை உருவாக்கத்தில் உங்களின் பங்களிப்பும் இருக்கிறது. அது உண்மை. சரி அப்படியானால் உலகத்தமிழர் பேரவை ஒவ்வொரு நாடுகளிலும் மக்கள் பலம் மிக்க ஒரு குடையின் கீழான அமைப்பு ஒன்றை உருவாக்குங்கள் என்று அழைப்பு விடுத்த போது, உலகத்தமிழர் பேரவையோடு நெருங்கிய தொடர்பை பேணிய நீங்கள் ஏன் அப்போது AFTA பற்றி சொல்லவில்லை. "அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே நாங்கள் 2000 அங்கத்துவம் கொண்ட,பல அமைப்புகளின் ஆதரவு கொண்ட ஒரு குடையின் கீழான மக்கள் கட்டமைப்பு இருக்கிறது". ஆகவே புதிய ஒரு அமைப்பு தெவை இல்லை என்று கூறியிருக்கலாமே?
7. அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் உருவாக்கத்தில் கூட உங்களின் பங்களிப்பும் இருந்திருக்கும். ஏனெனில் மெல்பேர்ணில் முதன் முதலாக அதன் கொள்கை விளக்க கூட்டம், மக்கள் கருத்துப்பகிர்வு அமர்வு நடைபெற்ற போது முன்வரிசையில் உங்களை பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள் "புதிய அமைப்பு தேவைதானா?" எனக்கேட்ட போது, புதிய அமைப்பின் தேவை பற்றி கேள்வி எழுப்பிய போது நீங்கள் இப்போது கூறியவற்றை அப்போது கூறியிருக்கலாமே?
8. அவுஸ்திரேலிய தமிழர் பேரவைக்கு ஆதரவு செய்யும் அமைப்புகளில் AFTA ஒன்று என தெரிவிக்கப்பட்டது. அந்த ஒருகுடையின் கீழான கட்டமைப்பின் கீழ் வரும் தனித்துவமான அமைப்புகளில் AFTA வும் ஒன்று என கூறப்பட்டது பொய்யா?
ராகவன் பேசவில்லை, அவரை பேசவைக்கிறார்கள். ராகவன் அம்பு, எய்தவன் வேறு. ராகவனைப்பற்றி நாங்கள் 15 வருசத்துக்கு மேலாக தெரியும், அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லை. மன உளச்சலில அவர் பேசுறார். அவர் ஒண்டா வருவார். டிசம்பர் மாதம் மட்டும் பொறுப்பம், நடக்கிறதை பாப்பம், பிறகும் பிரச்சினை எண்டால் கதைப்பம். 20 வருசமா கட்டிவளத்த ஒருங்கிணைப்பை சும்மா தேவையில்லாமல் கதைச்சும் எழுதியும் மற்ற ஆக்களுக்கு தெரியப்படுத்தியும் குழப்பதையுங்கோ.!.சில விசயங்களை சனதுக்கு சொல்ல ஏலாது. நடந்து முடிஞ்சாப் பிறகு எல்லாம் விளங்கும். அவுஸ்திரேலியாவில உப்பிடிப்பட்ட பிரச்சினைகளை பார்த்து பழம் திண்டு கொட்டை போட்டனாங்கள், இப்ப வந்த உமக்கு ஒண்டும் விளங்காது. இவ்வளவு காலமும் செய்த எங்களுக்கு தெரியும் இனியும் என்ன செய்ய வேணும் எண்டு. இப்பிடித்தான் இருக்கு இங்க உள்ளவர்களின் சிலரின் மனநிலை. இது சரியா? பிழையா? என்பது எல்லோருக்கும் தெரியும்.
ATC என்பது பலமான கட்டமைப்பாக உருவாகிவிடும் (ATC யின் இணையத்தளத்தினை 2 மாதங்களுக்குள் 20360 இக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள்). அப்படி உருவானால் இங்குள்ள சிலரின் "பருப்பு" இனியும் வேகாது. தாங்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டுவிடுவோம். அதனால் காலகாலமாக தாங்கள் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் பதவிகளும் பொறுப்புகளும் பறிபோய்விடும் என்பது இங்குள்ள அமைப்புக்கள் சிலவற்றினதும் அதன் தலைமைகளினதும் தேவையில்லாத பயக்கெடுதி. இது அர்த்தமில்லாதது.
உண்மையாக சமூக சேவை செய்பவனுக்கோ இல்லை மக்கள் மீது அக்கறை கொண்டவனுக்கோ இந்த பயம் எழ வேண்டிய அவசியமே இல்லை. உண்மையான செயற்பாடுகள் தூய மனத்தோடு செய்யப்படுமானால் மக்களின் தெரிவும் ஆதரவும் தானாக வரும். இது யதார்த்தம்.இதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
இறுதியாக, நான் ATC இக்கு வக்காளத்து வாங்கவோ இல்லை உங்களைப்பற்றி அவதூறு செய்யவோ வரவில்லை. AFTA என்பது அவுஸ்திரேலிய மக்களின் ஏகபிரதிநித்துவமான அமைப்பு என்றால் அதற்கு கூட என் முழுமையான பங்களிப்பு இருந்திருக்கும்.
உண்மையில் எதிர்காலத்தில் அவுஸ்திரேலிய ஈழத்தமிழர்களின் ஏக பிரதிநிதியாக வரவேண்டிய நீங்கள், வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, ஏன் இப்படி தடுமாறினீர்கள்? ஏன் இப்படியான செயற்பாட்டில் இறங்கினீர்கள்? என்பதுதான் மனவருத்தமான விடயம்.
செயற்பாடுகளின் ஊடாகவும் ஆத்மார்த்தமான சமுதாயப்பணி மூலமாகவும் பொறுப்புகளும், பதவிகளும் நம்மை தேடி வரும். அது கௌரவம். அதை தேடியோ இல்லை கேட்டோ பெறுவது கேவலமானது.
NOTE: என்னுடைய கேள்விகளுக்கு நீங்கள் பதில் எழுதுவீர்கள் என நம்புகிறேன். இல்லை "இவன் யார் சின்னப்பொடியன்! என்னை கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கு?" என நீங்களும் நினைத்தால் என்னால் ஒன்று மட்டும் செய்ய இயலும். தொடர்ந்தும் கேள்வி கேட்பது. எழுதிக்கிழிப்பதையும், பேசிக்கிழிப்பதையும் தவிர இந்த தமிழ்ப்பொடியனுக்கு வேறு விவஸ்தை இல்லை என நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.
உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
தமிழ்ப்பொடியன்
தம்பி ரமணா
05.09.2009
பதில்கடிதம்:
Hi Tamil Podiyan, Ramanan
Thank you for your writing.
The way I see is that it is very important that the World Tamils get together in a unified democratic union which will not be discredited simply by linking it into old groups who were not so democratic.
We all want to work for our freedom in our Tamil Homeland.
Having any connection to any old organisations or giving as of right status to anyone would not work for the better.
We should give important to the people who are talented and can devote some of their valuable time without merely seeking popularity.
I am sure lots of Tamils in Australia, if not all , will support the creation of the NEW Australian Tamil Congress (ATC) and become members of the organisation.
We would be wasting our time if we are going to try convincing the old fellows. Leave them alone, if they are genuinely talented and focused to the goals take them under the wings of ATC.
What we are lacking is that ATC is not functioning in a big fashion to get the message across to our people fast enough.
Let any organisations which are operating amongst us to operate. Don't waste our time to convince them to support the ATC. The individuals will decide whether ATC be in a better position to propagate our goals in the current international political stage.
Regards
Arivalagan
Sooddram Website
0 விமர்சனங்கள்:
Post a Comment