14 வயது மாணவன் தொடர்பில் மூன்று தினங்களாக தகவலில்லை
கிராண்ட்பாஸ் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவனை கடந்த ன்று தினங்களாகக் காணவில்லை என பெற்றோர் புகார் தெவிக்கின்றனர். அக்ரம் என்று அழைக்கப்படும் மொஹமட் ரசூல்தீன் (வயது 14) என்ற மாணவனே கடந்த புதன்கிழமையிலிருந்து வீடு திரும்பவில்லையெனவும் இது குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருப்பதாகவும் பெற்றோர் தெவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெயவருவதாவது: கிராண்ட்பாஸ் தமிழ்நாட்டைச் சேர்ந்த மொஹமட் நபார் என்ற தொழிலாளியின் மூத்த மகனே மொஹமட் ரசூல்தீன் ஆவார்.
இவருக்கு மூன்று இளைய சகோதரர்களும் உள்ளனர். மாணவன் பேஸ்லைன் வீதியிலமைந்துள்ள ராஜசிங்க மகா வித்தியாலயத்தில் தரம் 7இல் கற்று வருகிறான்.
சம்பவதினமான 30ஆம் திகதி புதன்கிழமை பாடசாலைக்குச் செல்லவில்லை.
பின்னர் மாலை தனது தாயிடம் விளையாடச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு செனறுள்ளான். அன்றிலிருந்து அவன் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், தமது பிள்ளைக்கு என்ன நடந்தது என்று தெயாது. பெற்றோரும் மற்றும் அவரது உறவினர்களும் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மூன்று தினங்களாக பொலிஸானால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் இதுவரை கைகூடவில்லை.
0 விமர்சனங்கள்:
Post a Comment