குடும்பத் தகராறே குருநாகல் குண்டு வெடிப்புக்கு காரணம்
குருநாகல் உடவத்பொல சுகததாஸ மாவத்தையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானதுடன் சாரதி உட்பட 12 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பிற்கு குடும்பத் தகராறே காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெயவந்துள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிமல் மெதிவக தெவித்தார்.
தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெவிக்கையில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் தனியார் வேனுக்குள் பொருத்தப்பட்டிருந்த குண்டே, சாரதி வேனின் இயந்திரத்தை இயக்கிய வேளையில் காலை 6.55 மணியளவில் வெடித்துள்ளது. இதில் சாரதி உட்பட 13 பேர் படுகாயமடைந்து குருநாகல் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவர்களில், மாணவி ஒருவரே உயிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு கொழும்பிலிருந்து விசேட குற்றப்புலனாய்வுப் பிவினர் மற்றும் அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
குருநாகல் பொலிஸானால் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, குடும்பத் தகராறே இந்தக் குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment