177 வன்னி தமிழர்களை தப்பியோடும்போது சுட்டுக்கொலை செய்த பிரபாகரன் கூட்டத்தினர்!
வன்னி இராணுவ முற்றுகையின் இறுதி கட்டத்தில் நிற்கதியான நிலையில் சிக்குண்டிருந்த தமிழ்மக்கள் தப்பியோட முடியாதவாறு வன்னிப்புலிகள் தடுத்திருந்தனர். அவர்களிடமிருந்து அடையாள அட்டைகளையும் வன்னிப்புலிகள் பலாத்காரமாக பிடுங்கி எடுத்திருந்தனர். நிலமை மோசமடைந்த கட்டத்தில் இராணுவத்தினதும். புலிகளினதும் கோர தாக்குதல்களில் இருந்து தமது உயிரை காக்கும் பொருட்டு புலிகளின் தடையை மீறி வெளியேறிய மக்கள் மீது புலிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்ததில் 177 அப்பாவி பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என ஒரே தடவையாக சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தற்போது அறியவருகின்றது.
இருந்தபோதிலும் புலிகளின் தடையை மீறி, கொலை அச்சுறுத்தல்களையும் துப்பாக்கி சூட்டையும் பொருட்படுத்தாது மக்கள் கிளர்ந்தெழுந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் தப்பிச் சென்றதாகவும் தப்பித்து வந்துள்ளோர் தெரிவித்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலான புலிகளின் மக்கள் மீதான அராஜகம் எத்தனையோ போராளிகளினதும், பொதுமக்களினதும், தலைவர்களதும் உயிரை பறித்தே வெற்றிநடை போட்டது.
இந்த நீண்ட பாசிசத்திற்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை புலிகள் இறுதிகட்டத்தில் எதிர்நோக்க வேண்டியிருந்தது தவிர்க்கமுடியாத வரலாற்று நிகழ்வாகி போய்விட்டது. புலிகள் அரசியல் பக்குவத்தையும், படிப்பையும் கால காலமாக புறக்கணித்தே வந்திருந்தனர். ஆனால் புலிகளின் ஆயுளின் இறுதிகட்டத்தின் இறுதி வாரத்தில் மக்கள் புரட்சியை புலிகள் படித்திருக்ககூடும்.
Neruppu
0 விமர்சனங்கள்:
Post a Comment