நிமலராஜன் கொலையாளியைக் கைதுசெய்யுமாறு பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம்
நிமலராஜன், ராவய, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராக கடமையாற்றியதுடன் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ், சிங்கள ஒலிபரப்புச் சேவைகளினதும் யாழ்ப்பாண செய்தியாளராக உயிருக்கும்போது கடமையாற்றிவந்ததுடன், அவர் அரசாங்கத்தின் அனுசரணையில் செயற்படும் ஆயுதக்
குழுவான ஈ.பி.டி.பி. அமைப்பின் துப்பாக்கிதாரியினால் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
அப்போது இடம்பெற்ற தேர்தல் மோசடி தொடர்பாகவும் முக்கியமாக ஊர்காவற்துறை பகுதிகளில் இடம்பெற்ற பாரியளவிலான தேர்தல் மோசடிகள் குறித்தும் அவர் ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட்டமையே நிமலராஜன் கொல்லப்படுவதற்கான காரணமாக அமைந்து என ஊடகவியலாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தெரிவிக்கின்றனர்.
இந்த ஊர்காவற்துறைப் பிரதேசம் கடற்படை மற்றும் ஈ.பி.டி.பி. அமைப்பினாலேயே பல வருடகாலமாக நிர்வகிக்பப்பட்டு வந்தது. அப்போது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களாக தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்~, எஸ்.பீ.திஸாநாயக்க, மங்கள சமரவீர ஆகியோர் செயற்பட்டாலும் இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்ட கொலையாளியை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு உள்நாட்டு, வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் அந்தக் கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
இந்தக் கொலை தொடர்பாக ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த நெப்போலியன் என்பவர் கைதுசெய்யப்பட்ட போதிலும் பிணை வழங்கப்பட்ட பின்னர் அவர் காணாமல் போனார். ஈ.பி.டி.பி. அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரான நெப்போலியன் தற்போதைய சமுக சேவைகள் அமைச்சரும், ஈ.பி.டி.பி.யின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் நெருங்கிய ஆதரவாளராவார்.
பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நெப்போலியன் இலங்கையிலிருந்து வெளியேற டக்ளஸ் தேவானந்தா முன்நின்று செயற்பட்டுள்ளார் என்பது பகிரங்கமான விடயமாகும். நெப்போலியன் என்ற கொலையாளியை போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து டக்ளஸ் தேவானந்தாவே பிரித்தானியாவிற்கு அழைத்து வந்துள்ளார். அவர் பிரித்தானியா சென்றபின்னர் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார். அன்றுமுதல் இன்றுவரை நெப்போலியன் பிரித்தானியாவில் சுதந்திரமாக வாழ்ந்துவருகிறார்.
டக்ளஸ் தேவனாந்தா பிரித்தானியாவிற்கு வரும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் நெப்போலியனை சந்திக்க மறப்பதில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. நெப்போலியன் என்ற கொலைச் சந்தேகநபர் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் அறிந்திருந்த போதிலும் ஏதோ ஒரு அழுத்தத்தின் அடிப்படையில் அவரைக் கைதுசெய்யவோ அவரது அரசியல் தஞ்சக் கோரிக்கையை நிராகரிக்கவோ பிரித்தானிய உள்விவகார அமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது விசனத்திற்குரியது என ஊடக மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Lankanewsweb
0 விமர்சனங்கள்:
Post a Comment