ஏழை இளைஞனுக்கு ரஜினி செய்த கல்வி உதவி!
ஓவியத் திறமை நிறைய உள்ள இந்த இளைஞருக்கு, சென்னையில் அனிமேஷன் கோர்ஸ் படிக்க ஆசை. ஆனால் வசதியில்லை. முதல்வர் அலுவலக கதவைக் கூட தட்டிப் பார்த்தாகிவிட்டது. ஆனால் பலனில்லை.
இறுதி முயற்சியாக சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டுக் கதவைத் தட்டினார், தனது வித்தியாசமான விவேகானந்தர் பாறை ஓவியம் வடிவில். கூடவே, பைபிளை மையப்படுத்தி இவர் உருவாக்கிய படைப்பையும் அனுப்பியுள்ளார்.
அவற்றைப் பார்த்து பிரமித்த ரஜினி அந்த இளைஞரை சென்னைக்கு வரவழைத்து அவரது படிப்புக்கு தேவையான உதவிகளைச் செய்ததுடன், அவருக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment