8 நடிகர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பழனி, சிவகங்கை நீதிமன்றங்களில் நேற்று முன்தினம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து டிசம்பர் 2ஆம் திகதியன்று பழனி நீதிமன்றில் நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உட்பட 8 பேர் ஆஜராக வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் விபசாரத்தில் ஈடுபட்டதாக நடிகை புவனேஸ்வரி கைதாகி பொலிஸில் வழங்கிய வாக்குலத்தில் வேறு பல நடிகைகளும் விபசாரத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார் என்ற செய்தி குறித்த நடிகைகளின் பெயர்களுடனும் புகைப்படங்களுடனும் தினமலர் நாளிதழில் வெளியானது. இதனால் கொதிப்படைந்த நடிகர் சங்கத்தினர் அச்செய்திக்கு கண்டனம் தெரிவித்து கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் பத்திரிகையாளர்களை மட்டுமன்றி அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசினர்.
இதனையடுத்து ஐ.பி.சி., 499 பிரிவின் கீழ் இவர்கள் குற்றம் புரிந்துள்ளதாக தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிவகங்கை பத்திரிகையாளர் சங்கத்தினர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி அவதூறாக பேசிய நடிகர், நடிகைகளான சூர்யா, சரத்குமார், ஸ்ரீபிரியா, விஜயகுமார், சத்யராஜ், அருண் விஜய், சேரன், விவேக் ஆகிய 8 பேரும் டிச., 2ல் பழனி நீதிமன்றில் ஆஜராக அழைப்பாணை விடுத்து உத்தரவிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment