இலங்கையில் யுத்த ஆயுதமாக பாலியல் துஷ்பிரயோகங்கள் பயன்படுத்தப்படவில்லை
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்
இலங்கையில் மோதல்கள் இடம் பெற்ற அண்மைய காலப்பகுதியில் பெண்கள் மீதான பாலியல் துஷ் பிரயோகங்களோ வேறு வகையான பாலியல் துஷ்பிரயோக ங்களோ இடம்பெறவில்லை என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்து ள்ளது.
ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத் தில் இலங்கை தொடர்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்டன் தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக விளக்கமளி த்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இலங்கையில் யுத்த ஆயுதமாக பாலியல் துஷ்பிரயோக ங்கள் பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளதாக வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம குறிப்பட்டார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநா ட்டிலேயே அமைச்சர் மேற்கண்ட வாறு கூறினார்.
பாலியல் வன்முறையை யுத்த ஆயுதமாக இலங்கை பயன்படு த்துவதாக ஹிலரி கிளிண்டன் பாது காப்பு சபைக் கூடத்தில் குற்றஞ் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச் சாட்டு குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதரினூடாக வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல் லாகம விளக் கம் கோரியிருந்தார்.
இதற்கு அமெ ரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள ரீதியான பெண்கள் விவ காரம் தொடர்பான தூதுவர் மெலனி வெர்வியரின் கை யொப்பத்துடன் தனக்கு விளக்கம ளித்து கடித மொன்று அனுப்பப் பட்டுள்ள தாகவும் அமைச்சர் போகொல் லாகம கூறினார்.
இலங்கையின் அரச கட்டுப்பாட்டில் உள்ள பெண்களின் மீது எதுவித பாலியல் துஷ்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டதாக எந்தவித தகவலும் கிடைக்கவில்லை எனவும்2006 முதல் 2009 வரையான மோதல்கள் இடம்பெற்ற அண்மைய காலப்பகுதிகளில் பெண்கள் மீது துஷ்பிரயோகங்கள் இடம்பெறவில்லை எனவும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆனால் உலகம் முழுவதும் இடம்பெற்ற ஏனைய மோதல்களில் இவ்வாறான குற்றங்கள் இடம்பெற்றமை தெளிவாகியுள்ளதாகவும் தமது விளக்கமானது இலங்கை மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு நிலையை தெளிவுபடுத்தும் என நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் பெண்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் இலங்கை வரலாற்றில் ஒரு போதும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் ஆயுதமாக பயன்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். n
அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டின் மூலம் இருநாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்படாது எனவும் இருநாடுகளுக்குமிடையில் மிக நீண்டகாலமாக நட்புறவு காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி பணிகளுக்கு அமெரிக்கா பாரிய ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் கூறினார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்கவும் கலந்து கொண்டார்.
Thinakaran






0 விமர்சனங்கள்:
Post a Comment