தமிழக எம்.பிக்கள் குழு தமிழ் கூட்டமைப்புடன் சந்திப்பு; இன்று யாழ். பயணம்
இலங்கை நிலவரம் குறித்து ஆராயவென தமிழக எம்.பிக்கள் குழு நேற்று கொழும்பு வந்தடைந்தது.
ஐந்து நாள் விஜயத்தை மேற் கொண்டு இலங்கை வந்துள்ள இந் தக் குழு எதிர்வரும் 14ம் திகதி வரை தங்கியிருந்து நிலைமைகளை ஆராயு மென அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக எம்.பி யும் முன்னாள் அமைச்சருமான டி. ஆர். பாலுவின் தலைமையில் வந்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று பிற்பகல் 1.33 க்கு கட் டுநாயக்க சர்வதேச விமான நிலை யத்தை வந்தடைந்தனர். ஐசி 573 ரக எயார் இந்தியா விமானத்தில் இவர்கள் வந்திறங்கியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்களே இதில் அங்கம் வகிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் டி. ஆர். பாலு, இலங்கை விவகாரங்கள் தொட ர்பான கலைஞரின் ஆலோசகரும் அவரது புதல்வியுமான கவிஞர் கனிமொழி, எம்.பிக்களான ரி. கே. எஸ். இளங்கோ, ஏ. கே. எஸ். விஜ யன், திருமதி ஹெலன் டேவிட்சன், என். எஸ். வி. சித்தன், என். சுதர் ஷன நாச்சியப்பன், ஏ. கே. எஸ். அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திரு மாவளவன், ஜே. என். ஆரூன் ஆகி யோரே இலங்கை வந்தவர்களாவர்.
இலங்கை தொழிலாளர் காங்கி ரஸ் செயலாளர் நாயகமும் அமைச்ச ருமான ஆறுமுகன் தொண்டமானும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதர கத்தின் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியும் மேற்படி எம்.பி க்கள் குழுவை கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்களின் வருகைக்கான பகுதியில் வைத்து வரவேற்றனர்.
விமான நிலையத்திலிருந்து இவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட துடன் நேற்றுமாலை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரகத்தில் இவர்களுடனான விசேட சந்திப்பொன்றும் இடம் பெற்றது.
கொழும்பில் பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ள இவர்கள் இன்று காலை யாழ். நகர் செல்கி ன்றனர். இவர்களுடன் அமைச்சர் தொண்டமான் மற்றும் இலங்கைத் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி ஆகி யோரும் செல்வார்களெனத் தெரிய வருகிறது.
கொழும்பிலிருந்து இன்று காலை யாழ். செல்லும் தமிழக குழுவினரை யாழ். மாநகர சபை மேயர் திருமதி யோ. பற்குணராஜா யாழ். துரைய ப்பா விளையாட்டரங்கில் வரவேற் பார்.
அமரர் எஸ். ஜே. வி. செல்வ நாயகம் அவர்களினது நினைவுச் சிலையூடாக யாழ். பொதுசன நூல கத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு கூட்டமொன்று நடைபெற விருக்கின்றது. அந்த கூட்டத்தில் யாழ். மாநகர சபையின் மேயர், இந் திய தமிழக பா.ஊ.களுக்கு நினைவுப் பரிசு ஒன்றினையும் வழங்கி கெளர விக்கவிருக்கின்றார்.
யாழ். நகர் செல்லும் மேற்படி தமிழக குழுவினர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக மாண வர்கள், இடம்பெயர்ந்த மக்களையும் தமிழக குழுவினர் சந்திப்பர்.
எதிர்வரும் 14ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவ ர்கள் தமிழ், முஸ்லிம், சிங்கள அர சியல் முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேசவுள்ளனர். ஜனாதிபதியையும் இவர்கள் சந்தித்துப் பேசவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டார ங்கள் தெரிவித்தன.
தமிழக எம்.பிக்கள் குழுவினர் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோ சனை நடத்தினர்.
இந்நிலையில், முதல்வருடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் சிதம்பரம் பேசினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment