இடம்பெயர்ந்த மக்கள் பகடைக் காய்களல்ல
புலிகளின் பிடியிலிருந்து சிரமங்களுடன் தப்பி வந்தவர்களும் தப்புவிக்கப்பட்டவர்களுமான மக்கள் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த இம் மக்கள் இன்று அரசியல்வாதிகளுக்கு ‘அவல்’ ஆகிப் போயி ருப்பது துரதிஷ்டமானது.
ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் பாரம்பரிய நேசக் கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி என்பன வும் மங்கள சமரவீரவும் இடம்பெயர்ந்த மக்களைத் தங்கள் அரச எதிர்ப்புப் பிரசாரத்தில் பிரதான அம்சமாகப் பயன்படுத்துகின்றனர். இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இடம் பெயர்ந்த மக்களையே தங்கள் அரசியலுக்கு மூலதனமாக்க முயற் சிக்கின்றார்கள். இனப் பிரச்சினையின் தீர்வையே பிரதான நோக்க மாக முன்வைத்து அரசியல் அரங்குக்கு வந்த இத் தலைவர்கள் கடந்த காலங்களில் பின்பற்றிய தவறான கொள்கை காரணமாக இன்று இனப்பிரச்சினையின் தீர்வு பற்றி என்ன பேசுவது எனத் தெரியாத தடுமாற்ற நிலையில் உள்ளனர். அதனால், இடம்பெயர்ந்த மக்கள் பற்றிப் பேசுவதில் அரசியல் பாதுகாப்பு இருப்பதாகக் கரு துகின்றனர்.
இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாகத் தங்கியிருக் கும் மக்களை இயன்றளவு விரைவில் அவர்களின் சொந்த இடங் களில் குடியமர்த்த வேண்டியதன் அவசியத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண் டிய விடயம். இடம்பெயர்ந்த மக்களில் அரசாங்கத்துக்கு மாத்திர மன்றி எதிர்க் கட்சிகளுக்கும் அக்கறை இருப்பதும் அந்த அக்க றையை அவை வெளிப்படுத்துவதும் நியாயமானதே. அந்த அக்க றையின் வெளிப்பாடு ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டுமே யொழிய அரசியல் லாபம் தேடும் முயற்சியாக இருக்கக் கூடாது.
எதிர்க் கட்சிகள் இடம்பெயர்ந்த மக்களைப் பற்றிப் பேசுவதெல்லாம் அரசியல் லாபத்தை நோக்கமாகக் கொண்டதாகவே இருக்கின்றது. இம் மக்கள் நிவாரணக் கிராமங்களில் சிறை வைக்கப்பட்டிருப்பது போல எதிரணித் தலைவர்கள் பேசுவது அபத்தமானது.
நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்கள் புலிகளின் பிடியில் இரு ந்த காலத்தில் மிகவும் துன்பங்களையும் இம்சைகளையும் அனுப வித்தவர்கள். அவர்களை நீண்ட காலம் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்காமல் விரைவில் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்பதில் நியாயம் உண்டு. அதே நேரம் அவர்களை ஏனோ தானோவென்று குடியமர்த்த முடியாது. புலிகளின் பிடியில் கஷ்டம் அனுபவித்தவர்கள் மீளக் குடியேறிய பின்னரும் கஷ்டம் அனுபவிக்கும் நிலை ஏற்படக் கூடாது. புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும். சிதைந்து போயிருக்கும் வீதிகள் திருத்தப்பட வேண்டும். நீர் விநியோகமும் மின்சார விநி யோகமும் சீராக்கப்பட வேண்டும்.
இவ்வளவும் முடிந்த பின் இடம் பெறும் மீள்குடியேற்றம் தான் அம்மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும். இந்த வேலைகளைச் சீக்கிரமாக முடிக்க வேண்டும் என அரசாங்கத்தின் மீது எதிரணிக் கட்சிகள் அழுத்தம் பிரயோகிப்ப தில் நியாயம் உண்டு. அதைவிட்டு, நிவாரணக் கிராமங்கள் சிறைக் கூடம் என்றும் அங்குள்ள மக்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் என் றும் பிரசாரம் செய்வதன் மூலம் அரசியல் லாபம் தேடுவது அநா கரிகமானது. அது தேசவிரோத செயற்பாடும் கூட. இக் கட்சிகளின் உண்மைக்குப் புறம்பான பிரசாரத்தைச் சில வெளிநாட்டு அமை ப்புகள் இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்துகின்றன.
நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்கள் கல்வியைத் தொடர் வதற்கும் பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்கும் வசதிகள் செய்யப்பட் டுள்ளன. இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பல்வேறு தொழிற் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் பேசுவதற்கான தொலைபேசி வசதிகளும் உண்டு. நியாய விலை கூட்டுறவுச் சங்க விற்பனை நிலையங்களும் அங்கே உள்ளன.
இவையெல்லாம் எதிரணித் தலைவர்களின் பார்வையில் கொடுமைக ளாகத் தெரிவது வியப்பாக இருக்கின்றது. இடம்பெயர்ந்த மக்களை அரசியலில் பகடைக் காய்கள் ஆக்காமல் அவர்களின் நலனுக்காக ஆக்கபூர்வமாகக் குரல் கொடுப்பதுதான் நியாயமானது.
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment