இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையுடன் அரசியல் நடத்த வேண்டாம்
வவுனியாவிலுள்ள அகதி முகாம்களில் வாழும் சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் அவல நிலை, மீள்குடியேற்றம் என்பன இன்று இலங்கை அரசியலில் மட்டுமல்ல, சர்வதேச தியாகவும் பேசப்படும் ஒரு முக்கிய விடயமாக மாறியுள்ளது.
அகதி மக்கள் தொடர்பில் வாக்குறுதி வழங்கியபடி அரசாங்கம் நடந்து கொள்ளவில்லை, அந்த மக்களைப் பராகமாகவே அரசாங்கம் இன்னும் பார்க்கிறதென்ற குற்றச்சாட்டு இன்று சர்வதேசத்தினால் ன்வைக் கப்பட்டுள்ளது. இந்த மக்களின் மீள்குடியேற்றம், சுதந்திர நடமாட்டம் தொடர்பில் பித்தானிய அரசும் அண்மையில் கருத்துகளை தெவித் துள்ளன.
மாரிகாலத்திற்கு முன்னரான மீள்குடியேற்றம், அகதி முகாம் மக்களின் சுதந்திர நடமாட்டம் ஆகியவற்றின் அவசியத்தை பித்தானியா கடுமையான குரலில் வலியுறுத்தியுள்ளது. பித்தானிய நாடாளுமன்றத் தின் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட இவைகள் குறித்து தமது கருத்துகளை வெளிப்படையாகத் தெவித்துள்ளனர்.
இதேபோன்று, ஐரோப்பிய ஒன்றியம் சில விடயங்களில் தனது விசனத்தைத் தெவிக்கத் தவறவில்லை. அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் நடமாடும் சுதந்திரத்தைத் தடுப்பதானது ஐக்கிய நாடுகள் சாசனத்துக்கு ரணான ஒரு செயல் என அந்த ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
தெற்காசிய நாடுகளின் உறவுகளுக்கான ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவின் தலைவியான ஜீன் லம்பேட் விடுத்திருந்த அறிக்கையிலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை நீடிப்பது குறித்த இறுதித் தீர்மானமெடுக்கும் சக்தியாகவும் ஐரோப்பிய யூனியனே உள்ளதென்ற ஒரு கருத்தையும் அவர் வெளியிடத் தவறவில்லை.
இதற்கு முன்னர் கூட அமெக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனும் சில கருத்துகளை தெவித்திருந்தார்.
ஆனால், எவர் எதைக் கூறினாலும் அவற்றினைப் பெதாக எடுத்துக் கொள்ளாத நிலையில் அரசாங்கம் செயற்படுவதுடன் சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன் பதிலளிப்பதிலும் மிக அக்கறையும் காட்டுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்துக்கு இலங்கை அரசுக்கு தாராள உதவிகள் செய்ததாக அரசாங்கத்தினால் அவ்வப்போது பட்டியலிடப்பட்ட நாடுகள் பல இன்று இந்த அகதிகள் தொடர்பில் மிகவும் கரிசனையாக செயற்படுகின்றன. தாம் விட்ட தவறுகள் தான் இந்த அவலத்துக்கு காரணமோ என்ற நிலையில் குற்ற உணர்வும் அந்த நாடுகளுக்கு இருக்கலாம். ஆனால் யார் எது சொன்னாலும் காதில் போட்டுக்கொள்ளாத அரசாங்கம் இந்த விவகாரத்தில் மட்டும் இது உள்ளூர் விடயமெனக் கூறிக்கொள்கிறது.
அரசாங்கத்தின் இந்தப் போக்கானது ஓர் ஆரோக்கியமான செயற்பாடென கூறடியாது. கடந்த 30 வருடகாலத்தில் பல்வேறு அவலங்களை எதிர்கொண்ட மக்கள் இப்போது அகதி முகாம்களில் துன்புறுகின்றனர்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று அரசின் மீது நம்பிக்கை வைத்து இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த இந்த மக்கள் நம்பிக்கை இழந்த நிலையில் ஒரு நடைப் பிணமான வாழ்வை எதிர்கொண்டுள்ளனர். அகதி முகாம் மக்களை பராமரிக்க சர்வதேசத்தின் உதவி தேவை என அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் கூறி வருவதனையும் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்துக்குச் செல்வோரும் பல்கலைக்கழக அனுமதி பெற்றோருமாக சுமார் 450 க்கும் மேற்பட்டோரின் பட்டப்படிப்பு கனவுகள், ஆசைகள் இன்று நூலறுந்த வெறும் பட்டம் போல் மாறிவிடும் நிலை தோன்றியுள்ளது. இது கவலைக்குய விடயம்.
இனப் பிரச்சினைக்கான தோற்றுவாய்களில் ஒன்றான கல்வித்துறையின் பாகுபாட்டுத் தனங்கள் இன்று வேறொரு வடிவில் தமிழ் மக்களின் கல்விக்குத் தடையாக அமைந்துவிடுவது கவலை தருகிறது.
இதேவேளை, உள்ளூர் எதிர்க்கட்சி அரசியல் வட்டாரங்கள் பலவும் இந்த அகதிகள் மீள்குடியேற்றம் தொடர்பில் பல சந்தேகங்களைத் தெரிவித் துள்ளன. அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் இடம்பெறுமென அரசாங்கம் தெரிவித் துள்ளதால் இந்த மக்களின் மீள்குடியேற்றம் என்பது அடுத்த வருடம் மே மாதத்தினையும் தாண்டி விடலாமென்பதே அந்தக் கட்சிகளின் சந்தேகம்.
அகதி மக்களை இந்த வருடத்திற்குள் முழுமையாக அல்லது பெரும் பகுதியினரை மீள்குடியேற்றினால் தேர்தல்களின்போது அந்த மக்களின் வாக்குகள் எதிரணிக்கு சென்று ஆளுங்கட்சிக்குத் தோல்வியைக் கொடுக்கலாமென்ற அச்சம் அரச தரப்பில் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தெவிக்கின்றன.
எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டு உண்மையானால் அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற செயற்பாடாகவே இது அமையும்.
அகதி முகாங்களை அரசியல் சூதாட்ட களங்களாகவும் அகதிகளை சூதாட்டக் காய்களாகவும் அரசாங்கம் பயன்படுத்த முயலுமாயின் அது ஒரு மனித நாககமற்ற செயலாகவே அமையும்.
ஆகவே, இந்த விடயத்தில் அரசாங்கம் உளத்தூய்மையுடன் செயற் படவேண்டும். அந்த மக்களை சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தி அவர்க ளின் சுதந்திரமான வாழ்வுக்கான வழிகளை விரைவாகக் காண வேண்டும்.
ஒரு நாட்டின் தலைவரும் அரசாங்கம் அந்த நாட்டின் அனைத்து இன மக்களின் மனதினையும் வெல்ல வேண்டும். தங்களது அரசியல் தேவைகளுக்காக அல்லது ஓர் இனத்தின் நலனுக்காக இன்னொரு இனத்தின் நலன்களை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது.
0 விமர்சனங்கள்:
Post a Comment