எந்தவொரு இராணுவ அதிகாரியையும் பதவி இறக்கவுமில்லை ஒதுக்கவுமில்லை
சிரேஷ்ட தன்மை பாராமல் பதவியுயர்வுகளே வழங்கப்பட்டுள்ளன
இராணுவ பேச்சாளர் மறுப்பு
“வடக்கில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எந்தவொரு இராணுவ அதிகாரியையும் பதவியிலிருந்து இறக்கவும் இல்லை. இராணுவத்திலிருந்து ஒதுக்கவும் இல்லை” என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.
மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர டி. சில்வா, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் சாலி கால்லகே மூவரும் இராணுவத்திலிருந்து ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும் அவர்களது தரம் குறைக்கப்பட்டு விட்டதாகவும் மங்கள சமரவீர எம். பி. தெரிவித்திருந்தமையை முழுமையாக மறுப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
58 ஆவது படைப்பிரிவுக்கு தலைமையேற்றுச் சென்ற பிரிகேடியர் சவேந்திர டி. சில்வாவை அவரது சிரேஷ்டத் தன்மையையும் பொருட்படுத்தாது மேஜர் ஜெனரல் தரத்துக்கு உயர்த்தப்பட்டார். தற்போது அவர் அதனைவிட உயரிய இடத்துக்கு நியமிக்கப்பட் டுள்ளார். இராணுவ தலைமை யகத்தில் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட் டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment