வேக வைக்காமலே சாப்பிட வருகிறது புது ரக அரிசி
குக்கர் வேண்டாம்; காஸ் வேண் டாம்; 45 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்தாலே போதும்; சாதம் ரெடி!
ஆம், இப்படி ஒரு புரட்சிகர புது ரக அரிசியை கட்டாக்கில் உள்ள தேசிய அரிசி ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த அரிசிக்கு ‘அக்கினி போரா’ என்று பெயரிட்டுள்ளனர். சாதாரண வெப்ப நிலையில் நல்ல தண்ணீரில் 45 நிமிடம் ஊற வைத்த பின், சாப்பிடும் அளவுக்கு இருக்கிறது. இந்த அரிசி குறித்து விஞ்ஞான தாபன குமார் ஆதியா கூறுகையில், ‘இது ஒரு குறுகிய கால அரிசி ரகம். அசாம் போன்ற குளிர் பிரதேசங்களில் விளையக் கூடியது. வடகிழக்கு மாநிலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் இந்த ரக அரிசி விளையாது. தண்ணீரில் ஊற வைப்பதன் மூலம் எளிதில் சாப்பிடலாம். ஊற வைக்கும் தண்ணீர் சுத்தமானதாகவும், தரமானதாகவும் இருக்கவேண்டும்’ என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment