சுடுகாட்டில் சாப்பாடு : குஜராத்தில் புரட்சி
மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் விதமாக, தீபாவளிக்கு முதல்நாள், சுடுகாட்டில் ‘டிபன்’ சாப்பிடும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர் பகுத்தறிவுவாதிகள். குஜராத் மாநிலத்தில், தீபாவளிக்கு முதல்நாள் ‘கலி சதுர்த்தசி’ என்று அழைக்கப்படுகிறது.
தாந்திரீக முறைப்படி, கலி சதுர்த்தசியன்று, இரவில் பில்லி, சூனியம் போன்ற சில சடங்குகளைச் செய்தால், வசிய சக்தி மற்றும் நோயற்ற உடல், செல்வம், வாழ்வில் அமைதி கிடைக்கும் என்பது இங்குள்ள நம்பிக்கை. இதை மூடநம்பிக்கை என்கின்றனர் ‘பாரத் ஜன விஞ்ஞான ஜாதா’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். அந்த அமைப்பினர், கலீ சதுர்த்தசியன்று சுடுகாட்டில் வடை, டீ, காபீ சாப்பிடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மூடநம்பிக்கையைத் தகர்க்கும் இந்த நிகழ்ச்சி ஒப்டோபர் 16ல் மாநிலம் முழுவதும் 450 இடங்களில் நடக்கிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment