விரலால் தேங்காய் உரிப்பு!
மலேசியாவின் கோலாலம்பூரைச் சேர்ந்த குங்பூ மாஸ்டர் ஹே இங் ஹீய் (55) இவர் சீன தற்காப்பு கலை நுட்பத்தை பயன்படுத்தி தன் கை விரல்களுக்கு வலு சேர்த்துள்ளார். இதன் மூலம் சாதனை படைக்க அவர் திட்டமிட்டார். இதன்படி நூற்றுக்கணக்கான மக்கள், சுற்றுலாப் பயணிகள் முன்னிலையில் அவர் தன் சாதனையை செய்து காட்டினார். 4 தேங்காய்களை வெறும் 30.81 விநாடிகளில் முழுமையாக உரித்துக் காட்டினார்.
சராசரியாக ஒரு தேங்காய்க்கு 7 விநாடிகள் உரிக்க அவர் எடுத்துக் கொண்டார். ஹோ இங் ஹீயின் சாதனை, மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ‘சாதனை செய்ய வேண்டும் என்பதற்காகவே, என் கைவிரல்களுக்கு கடும் பயிற்சி அளித்து வந்தேன்’ என்றார் ஹீய்!
0 விமர்சனங்கள்:
Post a Comment