தினமலர் செய்தி ஆசிரியர் கைதுக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு!
தமிழ்திரைப்பட நடிகைகள் பற்றி அவதூறு செய்தி பரப்பியதாகக்கூறி தினமலர் செய்தியாசிரியர் லெனினை சென்னை மாநகர போலீசார் இன்று இரவு கைது செய்தனர். நடிகை புவனேஸ்வரி என்பவர் பாலியல் வழக்கில் கைதான செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழ் மேலும் பல நடிகைகள் பாலியல் தொழில் செய்துவருவதாகக்கூறி செய்தியும் படம் வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து நடிகர்கள் சங்கத்தில் நடிகைகள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் நடிகர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வரிடமும், சென்னை காவல்துறை ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டது. இன்று நடிகர் சங்கம் சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று இரவு சென்னை மாநகர காவல்துறையினர் தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை கைது செய்தனர். தமிழக அரசின் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் சங்கத்தில் இன்று நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த்... ''தினமலர் செய்தியை படித்த என்கே ஒருநாள் முழுக்க எந்த வேலையும் செய்ய முடியான வேதனை பட்டேன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி வேதனையா இருக்கும் என்று நான் ரெம்ப கவலைபட்டேன். தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
செய்தி வெளியிட்ட நாளிதழின் ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கறார். இந்த விசயத்தில் அதிரடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதிக்கும், காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.”என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment